பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ = 1.65 மாவீரன் மயிலப்பன்= ---

23. பொறியில் அகப்பட்ட புலி

சிக்கல் சத்திரம்.

இராமநாதபுரத்திற்குத் தெற்கே கன்னியாகுமரி செல்லும் சேதுப்பாதையில் இருப்பது சேதுபதி மன்னரது இந்தச் சத்திரம். ஊருக்கு வெளியே மனித சந்தடி இல்லாத சூழலில் இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதியைச் சிக்கல் வட்டார அமில்தாரது அலுவலகமாக மாற்றப்பட்டிருந்தது. கடந்த இரு நாட்களாக கைகளிலும், கால்களிலும் விலங்கிடப் பட்டவராக சித்திரங்குடி சேர்வைக்காரர் ஒரு அறையில் அமர்ந்து இருந்தார். அவரது மனக் கண்களில் முதல் நாள் நடந்த நிகழ்ச்சிகள் அவரது வேதனையை விசிறி விட்டுக் கொண்டிருந்தது.

உலகம் எவ்வளவு மோசமாக மாறிவிட்டது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி பதினொன்று வயது இளைஞனாக இருக்கும்போது, சேதுபதிச் சீமையை முதன் முறையாக ஆற்காட்டு நவாப் கைப்பற்றி ஆட்சி நடத்திய பொழுது அந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருந்து வந்த கும்பெனிப் படைகளையும் கும்பெனி அலுவலர்களையும் மூர்க்கத்தனத்துடன் ஆப்பனுர் நாட்டு மக்கள் நாட்டுப் பற்றுடன் மிகவும் உக்கிரமாகவும்