பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மறவர் சீமை

தாக்கி அழித்த பல நிகழ்ச்சிகள் வரலாற்றில் பதிவு பெற்றுள்ளன. ஆப்பனூர் நாட்டு கிராமங்களுக்குள் அவர்கள் அடி எடுத்து வைக்காமலேயே அஞ்சி ஓடினர்.

ஆனால், நேற்று முன்தினம் அதே ஆப்பனுார் நாட்டு சித்திரங்குடியைச் சேர்ந்த கழிசடைகள், எதிர்பாராத வகையில் அவரது வீட்டில் புகுந்து அவரைத் தாக்கிப் பிணைத்து சிக்கலில் உள்ள கம்பெனி அமில்தாரிடம் ஒப்படைத்துவிட்டனர். கும்பெனியார் அவரது தலைக்கு விலையாக வைத்திருந்த ஆயிரம் சக்கரம் வெள்ளிப்பணத்தை கைக்கூலியாகப் பெறுவதற்கு, அவர் அப்பொழுது வைத்திருந்த ஐநூறு சக்கரப்பணத்தையும் இருபுஜங்களிலும் அணிந்து இருந்த பொன்னாலான வாகு வலயங்களை (காப்புகளை) பற்றிக் கொண்டு தம்மை விட்டுவிடுமாறு கெஞ்சிக் கேட்டும் அந்த முரட்டு முண்டங்கள் இணங்கவில்லையே.

இந்த அக்கிரமச் செயலுக்கு மூலகாரணமாக அமைந்தவர் அவரது மாமனார் தவசித்தேவர். மனைவியின் தகப்பனார் என்று எண்ணிப்பார்க்கும்போது அவரால் இந்த உலகில் ஒருவருக்கொருவர் உறவு பாராட்டிப் பழகி வாழ்ந்து வருவது எல்லாம் பொய்மையானதுதானா? 5ւԴ5 மனைவியை அன்று மனச்சஞ்சலத்துடன் உற்றுப் பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கையில், அங்கிருந்து நழுவிச் சென்ற அவர், வீதியில் அவரது வீட்டைக் கண்காணித்துவந்த அந்த முரடர்களிடம் அவர் அங்கு ரகசியமாக வந்திருப்பதைத் தெரிவித்துத் துப்புக் கொடுத்தவரே அவர்தானே! ஏன் அப்படி அவர் நடந்து கொண்டார்? ஏன்?.... ஒரு வேளை கும்பெனியார் அவருக்குக் கொடுத்து வந்த தொல்லைகளில் இருந்து நிரந்தரமாக விடுபட்டுக் கொள்வதற்காக இருக்குமா? அல்லது கும்பெனியாரது வெள்ளிப்பணத்தைப் பெறுவதற்கு அவரும் ஆசைப்பட்டாரா? சேச்சே தனது மகளது தாலிக்கயிற்றை அறுத்து எறியப்படுவதை எந்தத் தந்தையாவது விரும்புவாரா? அதிலும் ஒரு