பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167

மாவீரன் மயிலப்பன்

மறவன் அவரது செயல் மறக்குலத்திற்கே மாற்ற முடியாத களங்கம்.

சேதுபதிச் சீமையில் ஒரு பழக்கம் உண்டு. மறவர் இன மக்களில், மரக்கலக்கிளை அல்லது மரக்காகிளையைச் சேர்ந்த மறவர்கள் மூச்சை அடக்கி கடலில் முத்துக்குளிப்பதில் தேர்ந்து இருந்தனர். கடலுக்கு முத்து குளிக்கச் செல்லும்பொழுது அவர்களது உதவிக்காக தமது மாமன் (மனைவியின் தகப்பன்) அல்லது மைத்துனன் (மனைவியின் உடன் பிறந்தவன்) ஆகியவர்களில் ஒருவரை உடன் அழைத்துச் செல்வர். அவர்கள் கடலுக்குள் மூழ்குவதற்கு முன்னர், அவர்களைப் பிணைத்துள்ள கயிற்றின் நுனியை மாமன் அல்லது மைத்துனனிடம் கொடுத்துவிட்டு கடலுக்குள் குதித்து விடுவர். சரியாக குறிப்பிட்ட வினாடிகள் ஆனவுடன் அந்தக் கயிற்றுடன் கடல் அடியில் நின்று முத்து சேகரிப்பவரை உடனே கடலுக்கு மேலே கயிற்றை இழுத்து தூக்கிவிடுவார்கள். அவ்விதம் உரிய நேரத்தில் அவரை கடலுக்கு மேலே தூக்கத் தவறிவிட்டால், அவர் மூச்சடைத்து கடலுக்கடியில் இறந்து விடுவார்.

இவ்வளவு ஆபத்தான பணிக்கு இத்தகைய உறவினர்களை மட்டும் நம்பிச் செயல்படுவார்கள். முத்துக்குளிப்பவரின் மனைவி அவளது தந்தைக்கு மகளாக, தமையனுக்குத் தங்கையாக இருப்பதால் அவளது தாலியைக் காப்பாற்றுவது அவர்களது தவிர்க்க முடியாத அவசரக் கடமையாகி விடுகிறது. ஆனால் இங்கே சித்திரங்குடியில் ஒரு தந்தை (தவசித்தேவர்) தமது அருமை மகளின் தாலிக்கயிற்றை அறுத்து எறியும் இழிச்செயலில் ஈடுபட்டுவிட்டான். இதனை சேர்வைக்காரர் நினைத்துப் பார்த்த பொழுது எந்தச் சமாதானத்தையும் இதற்கு ஈடாக கொள்ள முடியவில்லை. மேலும் இந்தத் துரோகி தவசித்தேவர் அழைத்து வந்த கைக்கூலிகளது கும்பலில் மயிலப்பன் சேர்வைக்காரரது பால்ய சிநேகிதர்களும் அடங்கி இருந்தனர்....... என்றாலும் மனைவியைக் கடைசி முறையாகக் கண்டு கொள்ளக்கூடிய வாய்ப்புக் கிடைத்ததினால் ஏற்பட்ட ஒரு ஆறுதல்.