பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 ΤΟ

- மறவர் சீமை

24. பாளையங்கோட்டைச்

சிறை

சென்னை கோட்டையிலிருந்தும் திருச்சியிலிருந்தும் மதுரை வழியாக திருவாங்கூர் செல்லும் பெருவழியில் அமைந்துள்ள ஆங்கிலேயரின் இராணுவப்

பாசறை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரைத் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளிக் கோட்டைக்கு

அடுத்தபடியாக பலத்த பாதுகாப்பு நிலையமாக இந்தக் கோட்டையைப் பராமரித்து வந்தனர். மதுரை, திருநெல்வேலி மறவர் சீமைகளில் கிளர்ந்து எழுந்த மக்கள் கிளர்ச்சிகளை நசுக்கி ஒடுக்குவதற்கு இங்கிருந்து இராணுவ அணிகள் தான் பயன்படுத்தப்பட்டன. கும்பெனியாரது இந்தக் கோட்டையில் சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரர் சிறை வைக்கப்பட்டு இருந்தார்.

இராமநாதபுரம் கோட்டையிலிருந்து அவர் இங்கு கொண்டுவரப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்டது. "கடிநாய் எனப் பெயரிட்டு நாயைக் கொன்றுவிடு" என ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. அதன் அடிப்படையில்தான் சித்திரங்குடி சேர்வைக்காரரைக் கொன்று அழிப்பதற்கு முன்னர், "அவரை கொள்ளைக்காரன், திருடன், குடிமக்களைத் துன்புறுத்திய கொடியவன் என்று பெயர் சூட்டி உறுதி செய்வதற்கு ஒரு