பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

73

மாவீரன் மயிலப்பன்= –- ==

24.போராட்டத்திற்குப்

பரிசு

1802ம் வருடம் ஜூலை மாதம்:

அன்றும், பாளையங்கோட்டை தலைமை தளபதியின் அலுவலகம் சற்று விறுவிறுப்பாக இயங்கியது. முற்பகலில் ராணுவ வீரர்களா அணியொன்று வந்து கோட்டை வாசலில விசாலமான நழைவு வாயிலில் இருந்து தலைமைத் தளபதி அலுவலகம் வரை அணி வகுத்து நின்றது. அடுத்து, இன்னொரு சிறிய அணியினர் வந்து அந்தக் கட்டிடத்தின் உட்பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டனர் சிறிது நேரத்தில் விசாரணைக்கைத் மயிலப்பன் சேர்வைக்காரர், வழக்கம்போல இரும்பு விலங்குகள், சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு விசாரணை மன்றமாக பயன்படுத்தப்பட்ட அந்த அலுவலகக் கூடத்தில் நிறுத்தப்பட்டார். அங்கு நிசப்தம் நிலவியது.'

பாளையங்கோட்டை ராணுவதளம், கோடை வெயிலின் வெப்பத்தில் கண்ணுக்கெட்டிய துரம் கட்டாந்தரையாகக் காணப்பட்ட அந்த பூமி சூரிய வெப்பத்தை ஈர்த்துக் கொள்ள முடியாமல் எதிரொளித்தது. அந்தக் கனல் கொப்பளிக்கும் சூழலில் அமைந்த

103. Madurai District Records Vol.1139 - Page 89 - 93