பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 == - - =மறவர் சிமை

ராணுவ தளத்தின் அறையொன்றில் கும்பெனியாரின் பரமவிரோதி மயிலப்பன் மூன்று மாதங்களுக்கு மேலாக கடுமையான பாதுகாப்பிற்கிடையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவர் இத்தனை காலமாக எதிர்பார்த்த குற்ற விசாரணை அங்கே தொடங்கியது. அங்குள்ள விசாலமான அலுவலகக்கட்டிடம் விசாரணை மன்றமாக மாற்றப்பட்டு இருந்தது. கூடத்தின் உள்ளும் புறமும் சீருடையில் ராணுவ வீரர்கள் பலர் நின்று கொண்டிருந்தனர். மேடையில் அடுத்தடுத்து மூன்று தளபதிகள். ஆம்! அவர்கள் தான் நீதிவான்களாக நியமனம் பெற்று இருந்தவர்கள் அமர்ந்து இருந்தனர். அது ஒரு நீதிமன்றம் என்பதைவிட ஒரு ராணுவ மன்றம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். கைகளிலும், கால்களிலும், இரும்பு விலங்குகள் பூட்டப்பட்ட நிலையில் மக்கள் தலைவர் மயிலப்பன் சேர்வைக்காரர், கொடிய குற்றங்களான கொலை, கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளி போல, கொண்டு வந்து நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிர்ப்புறம் அமைக்கப்பட்டிருந்த பெட்டி போன்ற அமைப்பில் கும்பெனியாரின் குதிரைப் படைத்தளபதி ஷெப்பர்டு வந்து நின்று நடுவர் இருக்கையில் அமர்ந்து இருந்த தளபதிகளுக்கு, மரியாதை செய்துவிட்டு ராணுவத் தளபதி என்ற முறையில் மிடுக்காக நின்றார்.

நடுவர்களில் ஒருவர் "இங்குள்ள இந்தக் குற்றவாளியைப் பற்றித் தெரிந்ததைச் சொல்லலாம் என்றார்.

கும்பெனியாரது முதல் சாட்சியாக மேஜர் ஷெப்பர்டு வாக்கு மூலம் கொடுத்தார். குற்றவாளியான மயிலப்பன் சேர்வைக்காரர் கடந்த 1799ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது ஆட்களுடன் முதுகளத்துர், அபிராமம், கமுதி ஆகிய ஊர்களில் உள்ள கும்பெனியாரது கச்சேரிகளைத் தாக்கியும், சிப்பாய்களைக் காயப்படுத்தியும், கும்பெனி உடைமைகளையும், சொத்துக்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்; இந்த அடாவடிச் செயலுக்கு