177 மாவீரன் மயிலப்பன் - - - -
அடுத்த சாட்சி கமுதிக் கச்சேரியில் ஷராப் பணியில் இருந்த சுப்பன் செட்டி கி.பி.1801ம் ஆண்டு மார்ச்சு மாதம் முன் பகுதியில் கமுதிக்கு மயிலப்பன் ஐம்பது ஆட்களுடன் வந்திருந்தார். அவர்களில் நானகுபேர் வந்து என்னை தேவர் அழைத்து வரச் சொன்னதாகவும், சொன்னார். நான் அவர்களுடன் மயிலப்பன் இருக்கும் இடத்திற்குச் சென்றேன். அவர் கும்பெனியாரது பணம் எங்கு வைக்கப்பட்டிருக்கிறது எனக் கேட்டார். அங்கு இல்லை என்றும், அவைகளை இராமநாதபுரத்திற்கு எடுத்துச் சென்று விட்டனர் எனக் கூறினேன். என்னை அபிராமத்திற்கு அழைத்து வருமாறும் அங்கு என்னைக் கொன்று விடும்படி உத்தரவிட்டார். அவர் அபிராமம் சென்றவுடன் என்னைப் பிடித்து வைத்திருந்த சேவகர்கள் 200 சக்கரம் பணம் கொடுத்தால் என்னை விடுதலை செய்வதாகச் சொன்னார்கள். அவர்களை எனது வீட்டிற்கு அழைத்துச் சென்று 200 சக்கரம் மதிப்புள்ள நகைகளைக் கொடுத்ததும் என்னை விடுவித்தனர்.
அடுத்து கொடுமலூர் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி சாட்சிக் கூண்டில் நின்று சாட்சி சொன்னார். கடந்த வருடம் மார்ச் மாதம் மயிலப்பன் சேர்வைக்காரரும் அவரது ஆட்களும் கொடுமலும் கிராமத்தைச் சூழ்ந்து கும்பெனியாருக்குச் சொந்தமான நெற்களஞ்சியத்தைக் கொள்ளையிட்டும, நெல்லை அவர்களே சூறை போட்டுக் கொண்டதாகவும் அவரது ஆட்கள் ஊர் மக்களிடம் நூறு சக்கரம் பணம் கொடுக்குமாறு வலியுறுத்தியதாகவும் அவர்கள் வசூலித்து 30 சக்கரம் மட்டும் கொடுத்ததற்காக அவர்களை உதைத்ததாகவும் கூறினார். பின்னர் மீண்டும் ஆகஸ்டு மாதத்தில் நூறு ஆட்களுடன் வந்த மயிலப்பன் சாட்சியைப் பிடித்து அடித்ததாகவும், அவர்களது ஆட்களைத் தன்னைக் கொல்லுமாறு உத்திரவிட்டதாகவும் சொன்னார்கள். அவர்கள் ஈட்டிகளைக் காட்டி பயமுறுத்தினர் என்றும் தன்னைக் கொல்லவில்லை என்றும் சொன்னான்.
மணலூர் கிராமத்தைச் சேர்ந்த கணக்குப்பிள்ளை குமாரவேலு