பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன் - 7

முறைகளுக்கும் பணியாத நியாயமான நிலை அவர்களது வெம்பிய உள்ளங்களில் வீறு கொள்ளச் செய்தது. புரட்சிக்கான கருக்கள் தமிழகத்தில் - ஏன் இந்திய மாநிலத்தில் எங்கும் அமையாத நிலை, மகத்தான கிளர்ச்சி, மக்களது எழுச்சி சேதுபதிச் சீமையில் அப்பொழுது எழுந்தது. நமது நாட்டின் ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிரான முதல் விடுதலை இயக்கமாக, மறவர் சீமையில் மறவர்கள் தங்களது இரத்தத்தையும் இன்னுயிரையும் சிந்தி, பொன்னெழுத்துக்களால் பொறித்த புதிய வரலாறு வரையும் காலமும் கனிந்து வந்தது.

இம்மக்கள் ஒரு புதிய வரலாறு ஒன்றைப் படைத்தனர். அந்தக் கால கட்டமாகிய 18ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் உலக வரலாறு இரண்டு மாபெரும் புரட்சிகள் ஏற்பட்டதைச் சுட்டிக் காட்டுகின்றது. முதலாவதாக கி.பி.1776-ல் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்கக் கண்டத்தில் குடியேறிய ஆங்கில, பிரஞ்சு, ஸ்பானிய வம்சா வழியினரை இங்கிலாந்து நாட்டின் மூன்றாவது ஜார்ஜ் மன்னரது அரசாங்கம் வரிக்கொடுமைகளினால் வாட்டியபோது அந்த மக்கள் கிளர்ந்தெழுந்து அமெரிக்கக் குடியரசினைக் கண்டனர்.

இரண்டாவதாக கி.பி.1789ம் ஆண்டு பஞ்சத்திலும், பசியிலும் வாடிய பிரெஞ்சு நாட்டு மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஆடம்பரத்திலும், அதிகார மமதையிலும் வாழ்ந்த பிரெஞ்சு நாட்டு மன்னர் 14ம் லூயியை மக்கள் எதிர்த்து கிளர்ச்சி செய்து அந்த மன்னரைக் குடும்பத்துடன் அழித்தனர்.

இந்த இரு புரட்சிகளும் அவர்களது முடியாட்சி மன்னர்களை வீழ்த்துவதற்காக ஏற்பட்டவை ஆகும். ஆனால் அதே காலகட்டத்தில் இங்கே சேதுபதிச் சீமையில் மறவர் குடியின் மூத்த குடி மகனான சேதுபதி மன்னரைச் சிறையிலிட்டு மறவர் சீமையை ஆக்கிரமித்திருந்த வெள்ளை ஏகாதிபத்தியத்தினரை எதிர்த்து மன்னருக்காக மக்கள் கொடுத்த இந்திய நாட்டின் முதல் விடுதலைப்