பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IBO

மறவர் சீமை

அப்பொழுது மருது தம்மிடம் ஏன் அவர் முன்னதாக வரவில்லை எனக் கேட்டார். அதற்கு சாட்சி தாம் 1700 கலம் நெல்லும் 100 சக்கரமும் சேகரிப்பதில் முனைந்து இருந்ததாகப் பதில் சொன்னார். அந்தத் தொகை மயிலப்பனிடம் கொடுக்கப்பட்டதாகச் சொன்னார். உடனே மருது அவரை விடுதலை செய்தார். அதன்பிறகு தான் மயிலப்பனைச் சந்திக்கவில்லை என்று தெரிவித்தார். அத்துடன் விசாரணை மன்றம் கலைந்தது.

அடுத்தநாள் 10.06.1802

நீராவி கிராமத்தைச் சேர்ந்த பெரிய ஐயா அடுத்த சாட்சியாக விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் கொடுத்தார்.

1801ம் ஆண்டு ஜூன் மாதத்தில் எதிரியை மேலப்பெருங்களை கிராமத்தின் அருகே சந்தித்தேன். அப்பொழுது அவர், தனது ஊர் கிராம மக்கள் எதிரியிடம் 200 சக்கரம் பணம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டுள்ளபோது அவர் 150 சக்கரம் மட்டும கொடுத்து இருப்பதால் மீதித் தொகையையும உடனே கொடுத்து விடும்படி சொன்னார். சாட்சிக்காக அந்த ஊர் மக்கள் தலையிட்டு மீதப் பணத்தை அவர் கொடுத்துவிடுவார் என வாக்குறுதி அளிக்கப்பட்டவுடன் சாட்சி விடுதலை செய்யப்பட்டார்.

அடுத்து முதுகளத்துளர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணையா என்பவர் சாட்சியாக விசாரிக்கப்பட்டார்.

நீராவி கிராமம் பெரிய ஐயா வாக்களித்த பணத்தை சாட்சிதான் பொறுப்பு என்று மயிலப்பன் தெரிவித்தும் அந்தக் கிராம மக்கள் அப்பொழுது பணத்தைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தனர் என்று சொன்னார்.

முதுகளத்துர் கிராம மரக்காணம் அம்பலக்காரர் அடுத்த