1B5 மயவிரன் யிலப்பன்= - - o
மயிலப்பன் சேர்வைக்காரரைக் கும்பெனி வீரர்கள் அழைத்து வந்தனர். வழக்கம்போல் அவரது இரு முன்கைகளும் சிறிய சங்கிலியினால் இறுக்கமாகப் பிணைக்கப்ட்டு இருந்தன. அவரது கால்களில் இரும்பு விலங்குகள் பூட்டப்பட்டு அந்த விலங்குகளில் இணைக்கப்பட்டிருந்த சங்கிலியின் மறு துனி அவரது கழுத்தில் போடப்பட்டிருந்த இரும்பு வளையத்துடன் இணைக்கப்பட்டு சற்று தொய்வாக அவரது மார்பு, வயிற்றுக்கு நேரே தொங்கிக் கொண்டிருந்தது. அதாவது அவரது விலங்கு பூட்டப்பட்ட கால்களை மெதுவாக நகர்த்தி நடப்பதற்கு ஏதுவாக அந்தச் சங்கிலி தொங்கவிடப்பட்டிருந்தது.
சிறு குழந்தை தத்தி, தத்தித் நடந்து வருவதுபோல மயிலப்பன் சேர்வைக்காரர் மெதுவாக அந்த அலுவலகக் கட்டிடத்தின் கூடத்திற்கு வந்து சேர்ந்தார். சில நிமிடங்களில் கும்பெனி வீரர்கள் தங்களது துப்பாக்கிகளுடன் விறைப்பாக நின்று, அப்பொழுது அங்கு அந்த மூன்று ராணுவத் தளபதிகளுக்கு ராணுவ முறைப்படி மரியாதை செய்தனர். அவர்கள் அந்தக் கூடத்தின் நடுவில் போடப்பட்டு இருந்த இருக்கைகளில் அமர்ந்தவுடன் குற்றவாளிக் கூண்டில் மயிலப்பனை நிற்குமாறு செய்தனர்.
விசாரணை தொடங்கியது. இராமநாதபுரம் உதவிக் கலெக்டர் மில்லர் மயிலப்பன் சேர்வைக்காரர் மீதான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு நடுவர்களுக்குத் தெரிவித்தார். அடுத்து அந்தக் குற்றச்சாட்டுகளை மெய்ப்பித்துச் சொல்வதற்காக, கமுதி, முதுகளத்துரைச் சேர்ந்த பொய்சாட்சிகள் வாக்குமூலம் வழங்குமாறு செய்தார்.
இந்த சாட்சிகளின் வாக்குமூலங்களை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்த மயிலப்பன் அவர்களது வாக்குமூலங்களுக்கு எதிராக எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. அடுத்து நடுவர்கள் மயிலப்பன் சேர்வைக்காரர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய