பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

மாவீரன் மயிலப்பன்

கொண்டனர். நீங்களும் உங்களது கூலிப்படையினரும் முதுகளத்துர் பகுதிக்கு இந்த கிளர்ச்சிகள் நடைபெற்ற பிறகு இருபத்தைந்து நாட்களுக்குப் பிறகுதான், வரமுடிந்தது. இடைப்பட்ட காலத்தில் எங்களது கிளர்ச்சி எல்லாத் திக்குகளிலும் பரவியது. புதுவெள்ளம் புகுந்தது போல எங்களது திட்டம் சிறப்பாக குடிமக்களால் அப்படியே கைக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பரங்கியரது சேகரம் பட்டறை, களஞ்சியம் மற்றும் அவர்களது பொருட்கள் அனைத்தும் கொள்ளையிடப்பட்டன.

மேலும் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்காடு நவாப்பிடம் கும்பெனியாரும் இணைந்து இராமநாதபுரம் மீது படையெடுத்து பதினொன்று வயது சிறுவனான எங்களது சேதுபதி மன்னரைக் கைது செய்து ஒன்பதாண்டுகள் கழித்து விடுதலை செய்த பிறகு, மீண்டும் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்த பொழுது குடிமக்கள் எவ்வித எதிர்ப்பும் காண்பிக்கத் தவறியதற்கு எங்களிடம் தலைக்கு ஐந்து பணம் அபராதம் வசூலித்தனர். அத்தகைய நிலை ஏற்படுமோ என்ற அச்சமும் இருந்ததும் ஒரு வேளை எங்களது கிளர்ச்சியைக் கும்பெனியார் அடக்கி, அதன் காரணமாக சேதுபதி மன்னர் நாடு திரும்பாமல் போய் விட்டால் நாங்கள் என்ன செய்வது. பக்கத்துப் பாளையங்களுக்குள் புகுந்து மறைந்து விடுவது என்றும் அல்லது கிராமங்களை விட்டு வெளியேறி விடுவதென்றும் முடிவு செய்தோம்.

"அப்புறம் என்ன நடந்தது?"

கும்பெனியாரது நடுவர் மயிலப்பனைப் பார்த்து கேட்டார்.

"மயிலப்பன் சேர்வைக்காரரும் தமது வாக்குமூலத்தைத் தொடர்ந்தார்.

"சிவகெங்கைச் சேர்வைக்காரரது மகன் தலைமையில் சிவகங்கை அணி ஒன்றை அழைத்துக் கொண்டு இராமநாதபுரம் கலெக்டர் கமுதி வருவதாக தகவல் கிடைத்தது. இதைப்பற்றி நானும் மற்ற சேர்வைக்காரர்களும் கலந்து பேசினோம். அவர்களுடன்