188
- - - மறவர் சீமை
பொருதுவதைத் தவிர்ப்பது என முடிவு செய்யப்பட்டது. சேர்வைக்காரர்களும், தேவர்மார்களும் கிராமங்களுக்குத் திரும்பிச் சென்றனர். நாங்கள் கமுதிக்கு வட கிழக்கே உள்ள கீழக்குளம் காட்டிற்குள் கூட்டாளிகளுடன் சென்றோம்.
ஆனால் விரைவில் கும்பெனி பட்டாளமும் சிவகங்கை சீமை சேவகர்களும் இந்தக் காட்டைச் சூழ்ந்து தாக்கினர். எங்களது கூட்டாளிகளில் முப்பதுபேர் கொல்லப்பட்டனர். அவர்களில் எங்களது சிங்கன்செட்டியும் ஒருவர். மேலும் நாற்பது பேர்களைச் சிறைப்பிடித்தனர். நானும், என்னுடன் எஞ்சியிருந்த முப்பது பேர்களும் கிழக்கே காக்கூர் நோக்கிச் சென்று விட்டோம். அப்பொழுது அங்கு கிடைத்த செய்தி கலெக்டர் கிளர்ச்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் பொதுமன்னிப்பை அளித்து விட்டதாகவும் ஆதலால் தங்களின் இயல்பான தொழில்முறைகளில் ஈடுபடலாம் என தெரிவித்திருப்பது தெரியவந்தது.
நானும் எனது கிராமத்திற்கு புறப்பட்டுச் செல்லும்போது வழியில் இளஞ்செம்பூர் பண்டாரத்தேவனைச் சந்தித்தேன். அவர் சொன்னார். கலெக்டர் ஒரு பிரகடனம் வெளியிட்டு இருப்பதாகவும் அதில் கிளர்ச்சியில் ஈடுபட்ட அனைத்துக் குடிமக்களுக்கும் என்னைத் தவிர பொதுமன்னிப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் பத்திரமாக ஊர் திரும்ப முடியாது என்பதை உணர்ந்த நான் காடல்குடிக்கும் பின்னர் பிள்ளையார் குளத்திற்கும் சென்றேன். மீண்டும் காடல்குடி சாலைவழியாக வெள்ளக்கோயிலுக்கும் மண்டலமாணிக்கத்திற்கும் சென்றேன். அங்கு ஆறு நாட்களை கழித்துவிட்டு ஆடுமேய்க்கும் இடையரது மாற்று உடையில் கமுதியைச் சுற்றிக் கொண்டு நெட்ருேக்கும் பின்னர் தொண்டி வழியாக சோழ சீமைக்கும் சென்றேன். வெள்ளாண்குண்டு கிராமத்தில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தங்கியிருந்து விவசாயக் கூலியாக வேலைபார்த்து வாழ்ந்து வந்தேன்.