= - 189 மாவீரன் மயிலப்பன்= - - -
இவைகளைச் சிரத்தையுடன் கேட்டு மயிலப்பன் சேர்வைக்காரரது வாக்குமூலத்தைக் காகிதத்தில் பதிவு செய்து கொண்டு வந்த நீதிபதியான ராணுவத் தளபதி "மிகவும் சுவாரசியமாக இருக்கிறது" என்று சொல்லிவிட்டு தனது இருக்கையை விட்டு எழுந்தார்.
மதிய உணவு வேளை கடந்துவிட்டதால் விசாரணையை அடுத்த நாளைக்கு ஒத்தி போட்டு உத்தரவிட்டார்.
"அங்கு நான் வாழ்ந்த வாழ்க்கை எனக்கு சலிப்பூட்டியது. எனது எண்ணங்கள் எப்பொழுதும் முதுகளத்துர் பகுதியிலேயே சுழன்று கொண்டிருந்தது. ஒருநாள் வெள்ளான்குண்டு கிராமத்தை விட்டு ஊருக்குப் புறப்பட்டேன் வழியில் சிவகங்கைச் சீமையில் உள்ள நெட்டுவில் தங்கினேன். நான் அங்கு வந்து இருப்பதை அடைப்பசேர்வைக்காரர் மூலம் அறிந்த வெள்ளை மருது எனக்குச் செய்தி அனுப்பி வைத்தார். தொடர்ந்து தங்கி இருக்குமாறும் எனது சாப்பாட்டிற்கு பத்து கலம் நெல்லும் அனுப்பி வைத்தார். பின்னர் அவர் என்னை சூடியூர் சத்திரத்தில் சந்தித்தார். அமைதியாக அங்கு தங்கியிருக்குமாறு சொன்னதுடன் எனது நடவடிக்கைகளை ஊக்குவித்து உற்சாகப்படுத்தினர். ஜூலை 1799 முதல் பாஞ்சாலங்குறிச்சி கிளர்ச்சிகள் தொடங்கும் வரை அங்கு தங்கியிருந்தேன். பாஞ்சாலக்குறிச்சியிலிருந்து ஒரு அதிகாரியும் ஒரு ராஜகுடும்பத்தினரும் வந்து சந்தித்தனர். பின்னர் கட்டபொம்மநாயக்கரது பாளையத்தில் உள்ள நாகராஜமணியக்காரும் வந்து சந்தித்தார். அவர்களைச் சிவகங்கைச் சேர்வைக்காரர் வெள்ளை மருதுவின் வக்கீலாக அவரது மகன் உடையணன் வந்து சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பினைத் தொடர்ந்து வெள்ளை மருது சேர்வைக்காரர் சிவத்த தம்பிவசம் நூறு வீரர்களை அனுப்பி வைத்தனர். ஆயுதபாணிகளான அவர்களிடம் பதினைந்து மஸ்கட் துப்பாக்கி,