பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்= - - 191

அன்று தங்கினோம். அடுத்தநாள் காலையில், தளபதி மில்லர் மறவர் பட்டாளத்துடன் நாகலாபுரத்தில் இருந்து கமுதி வந்து சேர்ந்து இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அடுத்து அவர் கொடுமலூர் வருவது உறுதியானதால் நாங்கள் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த புதுக்குடிக்கு போய்விட்டோம். அங்கிருந்து ஆனந்துாருக்குச் சென்றேன். இராமநாதபுரம் சீமையின் வடக்குப் பகுதிகளில் கிளர்ச்சிகளைத் துண்டிவிடுவதற்காக.

நான் ஆனந்துளில் இருக்கும்பொழுது எனக்கு சின்னமருது சேர்வைக்காரர் கட்டளை அனுப்பி இருந்தார். பத்துநாட்களில் அந்தப் பகுதியில் கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டு மக்களைத் திரட்டுமாறும் அந்தப் பகுதியில் இருபது நாட்கள் இருந்தபொழுது எனக்கு உடல் அசெளகரியம் ஏற்பட்டது. அப்பொழுது புளியால் கிராமத்தில் இருந்தேன். உடல்நிலை சீரடைய மூன்று மாதங்களாகி விட்டன. அப்பொழுது சிவகங்கை சேர்வைக்காரரிடமிருந்து செய்தி வந்தது. இராமநாதபுரம் சேதுபதி பட்டத்திற்கு உரிமை கொண்டாடும் மீனங்குடி முத்துக்கருப்பத் தேவர் கமுதிக் கோட்டைப் போரில் ஈடுபட்டு இருப்பதாகவும் அவருக்கு உதவியாக அங்கே போக வேண்டும் என நானும் வெள்ளை மருது சேர்வைக்காரரும் கமுதிக் கோட்டைக்குச் சென்று அவரைச் சந்தித்தோம். எனது செலவினங்களுக்கு மீனங்குடித்தேவர் பணம் கொடுத்தார். என்னுடன் பத்து வீரர்களை அனுப்பி எங்களை கீழக்கரைக்குச் சென்று அப்துல்காதர் மரக்காயர் மற்றும் சில வியாபாரிகளைப் பிடித்து வருமாறும் அந்த ஊரைக் கொள்ளையிடுமாறும் வெள்ளை மருது ஆணையிட்டார். நாங்கள் கீழக்கரை சென்றோம். ஆனால் அந்த நபர்களைப் பிடிக்க முடியவில்லை. அவர்கள் அப்பொழுது அங்கு இல்லை. அவர்களது உறவினர் சிலரையும் பிடித்துக் கொண்டு கமுதி திரும்பினோம்.

அந்தச் சூழ்நிலையில் வெள்ளை மருது சேர்வைக்காரருக்கு