பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

-- - - =மறவர் சீமை

கிடைத்த தகவல் கும்பெனி தளபதி அக்கினியூ பட்டாளத்துடன் வருவதாக இருப்பதால் உடனே சின்னமருது திரும்பி வரவேண்டும், என்பது உடனே சின்னமருது சேர்வைக்காரரும், மீனங்குடி தேவரும் சிலருடன் வெள்ளை மருதுவைச் சந்திக்க முத்துார் புறப்பட்டுச் சென்றனர்.

எனது உறவினர் ஒருவரது இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சித்திரங்குடி சென்று வந்தேன். கும்பெனி பட்டாளம் தளபதி பீட்டர் தலைமையில் கமுதி வந்து கொண்டு இருப்பதாகச் செய்தி கேட்டு திரும்பினேன். முத்துக்கருப்பத் தேவருடன் சேர்ந்து கொண்டேன். அபிராமத்தை அடுத்து சின்னமருது சேர்வைக்காரரை சந்திக்க மீனங்குடித்தேவர் காளையார்கோவில் சென்றுவிட்டதால் நான் இருபத்தைந்து நாட்கள் மீனங்குடியில் முத்துக்கருப்பத்தேவரது சகோதரருடன் தங்கி இருந்தேன். சிவகங்கையில் இருந்து செய்திகளை எதிர்பார்த்து கடைசியாக காளையார்கோவில் கோட்டைப் போரில் தோல்வி பற்றிய செய்தி கிடைத்தது. அதற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டேன். பல இடங்களிலும் தலைமறைவாகச் சுற்றி வந்தேன். எந்த ஊரிலும் தங்க இயலாத சூழ்நிலையில் முதுகளத்தூர், அபிராமம், பாப்பான்குளம் பகுதிகளில் எனக்கு சோர்வும் சலிப்பும் மிகுதியாகிவிட்டது. அடுத்தடுத்து ஏமாற்றங்கள் எனது நம்பிக்கைகளை LTIGHT உறுதியைக் குலைத்துவிட்டன. கும்பெனியாரது ஆயுத வலிமையும், குள்ளநரித்துரோகமும் மக்களைப் பிரித்துக் கிளர்ச்சியை நசுக்கி என்னைத் தனிமைப்படுத்தி விட்டபிறகு, நான் மட்டும் ஊர் ஊராக அலைந்து திரிவதனால் ஏற்படப்போவது ஒன்றுமில்லை. கலெக்டரையோ அல்லது அமில்தாரையோ என்னிடத்தில் உள்ள பொருட்களுடன் சந்தித்து நிலைமையை எடுத்துக்கூறினால் என்ன என்று யோசித்தேன். எதற்கும் வீட்டிற்குச் சென்று மனைவி, மாமனாருடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யலாம் என சித்திரங்குடி சென்றேன்.

இந்தச் சமயத்தில் விசாரணை நடுவராக இருந்த