பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்

195

ஒருவாரம் கழிந்தது, ஒருநாள் காலையில்

நடுவர்களான ராணுவத் தளபதிகள் மூவரும் அங்கிருந்த ராணுவ வீரர்களை மரியாதையை ஏற்றுக் கொண்டவர்களாக விசாரணை இருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். ஒருமுறை அவர்களது கடைக்கண் பார்வை மயிலப்பன் சேர்வைக்காரர் மீது பட்டுத் திரும்பியது. மயிலப்பன் முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அவர்களைக் கூர்ந்து பார்த்தவாறு நின்று கொண்டு இருந்தார். நடுவர்களில் ஒருவர் ஒரு கோப்பு ஒன்றை மற்ற இருவர்களுக்கும் படிக்குமாறு கொடுத்தார். அதைனை முழுவதுமாகப் படித்து முடித்த இருவரும் அவர்களது ஒப்புதலை தெரிவிக்கும் வகையில் அந்தக் கோப்பில் கையெழுத்துப் போட்டுவிட்டு, தலைமை நடுவரான தளபதி பர்ரோஷிடம் கொடுத்தனர். அவரும் அந்தக் கோப்பில் கையெழுத்திட்டார். பின்னர் ஆங்கிலத்தில் வரையப்பட்டு இருந்த அந்த தீர்ப்புரையைப் படித்தார். அந்தத் தீர்ப்புரையின் தமிழ் சுருக்கம்.

"விசாரணைக் கைதியாக எங்கள் முன் நிறுத்தப்பட்டுள்ள இராமநாதபுரம் சீமையைச் சேர்ந்த சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரர் கடந்த 24.4.1799ந் தேதி முதல் முதுகளத்துர், கமுதி வட்டாரங்களில் நமது