உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 Կ Ե

மறவர் சீமை

சர்க்கார் கச்சேரிகள், தானியக் களஞ்சியங்கள் சேகரம் பட்டறை கைத்தறித் துணி கிட்டங்கிகளை எவ்விதம் காரணமும் இல்லாமல், அவருக்குச் சொந்த பாதிப்பும் இல்லாத நிலையில், அவரும் அவரது தோழர்களும் அவைகளைத் தாக்கிக் கொள்ளையிட்டும், தீவைத்துக் கொளுத்தியும், சர்க்காருக்கும் பொதுமக்களுக்கும் ஏராளமான இழப்பீடுகளுகளை ஏற்படுத்தி உள்ளனர். மற்றும் சட்டத்தையும் அமைதியையும் நிலைநாட்டச் சென்ற கும்பெனியாரது வீரர்களை எதிர்த்துப் போரிட்டும் உயிர்ச் சேதமும் ஏற்படுத்தியுள்ளார்கள். இவரது அத்துமீறிய அராஜகச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இந்த நாட்டில் நீதியையும், தர்மத்தையும் நிலை நிறுத்துவத்ற்காகவும், நமது கும்பெனி அரசாங்கம் இந்தக் கொடிய அரசாங்க விரோதிக்கு மரண தண்டனை வழங்கி தூக்கில் போடும்படி உத்திரவிடுகிறது.

மதராஸ் மாநில கவர்னரது ஒப்பம் பெற்று, விரைவில் இந்த தண்டனை நிறைவேற்றப்படும்.

கும்பெனி அரசாங்கத்திற்காக நடுவர்கள்:

தளபதி பர்ரோஷ்

தளபதி ஒஹாரா டிராட்டர்

தளபதி நோயில்ஸ்

நடுவர் குழுத்தலைவர் ஆங்கிலத்தில் வரையப்பட்டு வாசிக்கப்பெற்ற இந்த தீர்ப்புரையின் சுருக்கத்தை கும்பெனி அலுவலரான துபாஷ் ஒருவர் மேலேகண்டவாறு தமிழில் உரக்கச் சொன்னார். தனது மரண தண்டனை பற்றிய இந்த தீர்ப்புரையைக் கேட்ட மயிலப்பன் சேர்வைக்காரரது தோற்றத்தில் முகபாவத்தில் எவ்வித மாற்றமும் தென்படவில்லை. இதனை நடுவர்களும் புரிந்து கொண்டு இருக்க வேண்டும். இந்த மரணச்சீட்டு சம்பந்தமான