பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O1

மாவீரன் மயிலப்பன்

இதழ்களைச் சொரிந்து வரவேற்றவண்ணம் முன்னே வருகின்றனர். அவர்களை அடுத்து கட்டியக்காரர்கள் சீருடையில், கையில் பொன்னாலான தடிகளைப் பிடித்தவாறு சேதுபதி மன்னரது விருதாவளிகளை உரக்கச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

இந்த அற்புதக் காட்சியைக் கண்டு களிப்பதற்காகத்தானே இத்தனை ஆண்டுகளுக்கும் மக்களைத் திரட்டி கும்பெனியாருடன் மோதலில் ஈடுபட்டு வந்தது. விதந்தரு கோடி இன்னல் விழைந்து எம்மை வாட்டி வருத்தியது. எனது முயற்சிகள் போராட்டங்கள் - விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதே என்று நொந்து கொண்டிருக்கும்பொழுது எனது கனவுகள் - நம்பிக்கைகள் மெய்யாகிவிட்டன! இறுதியில் கும்பெனியாருக்கு நல்ல புத்தி வந்து இருக்கிறது.

இதோ சேதுபதி மன்னர் அரசவையில் மக்களது ஆரவாரம் பண்டிதர்களது வேத கோஷங்களுக்கிடையில் அமர்ந்தார். அரச குடும்பத்தினர் ஒவ்வொருவராக வந்து மன்னரை சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கி எழுந்து நிற்கின்றனர். அடுத்து முதுகளத்தூர், கமுதி வட்டார நாட்டுத்தலைவர்கள். அதோ மீனங்குடி முத்துக்கருப்புத் தேவர் கூட வந்து இருக்கிறார். அடுத்து மன்னர் அங்கும், இங்கும் பார்த்து பிரதானியாரிடம் யாரைப் பற்றியோ விசாரிக்கின்றார். ஒரு வேளை......... என்னைப் பற்றிக் கேட்டிருப்பாரோ! என்ன? நாமும் சென்று மன்னரைச் சேவித்தால் என்ன? என்னால் முடியவில்லையே? ஏன்? என்ன காரணம்?........

"மயிலப்பன் சேர்வைக்காரரே!" என்று அழைப்பது கேட்டது கண்களை நன்கு விழித்துப் பார்த்தார். சிறை அலுவலர்தான் நின்று கொண்டு "அபிராமம் புறப்பட வேண்டும்" என்று சொல்லி கை விலங்குகளை மட்டும் கழற்றி விட்டார். இராமநாதபுரம் அரண்மனை சேதுபதி மன்னர் - அனைத்தும். ஆம்! அனைத்தும் கனவு. சேர்வைக்காரருக்கு ஏமாற்றம் சோர்வு!