பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2

மறவர் சிமை

பிறந்த மண்ணைப் பெரிதும் நேசித்தவர்கள் புழு, பூச்சிகள் போல உணர்ச்சிகளையும், உள்ளத்தில் ஆசைகளையும் அடக்கியவாறு ஊமைகளைப் போல வாழும் அப்பாவி மக்களுக்காக பரிந்து உழைத்தவர்கள், இன்னும் பிறவியின் பெரும் பயனாக அன்பு, பாசமும் கொண்டு அந்தப் பாமர மக்களுக்காகப் போராடியவர்கள் மாய்க்கப் பெற்றனர். அல்லது மடிந்து விழும்படி செய்யப்பட்டனர்.

மதுரை ஆளுநராகப் பதவியேற்று மதுரைச் சீமை நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் பல அரிய தொண்டுகளைச் செய்த மாவீரன் கம்மந்தான் கான்சாகிப், நன்றி உணர்வில்லாத நவாப் முகம்மது அலியின் ஆணையின்படி வெள்ளையர்கள் வஞ்சகமாக அவரைப் பிடித்து 16.10.1764ல் மதுரையில் தூக்கில் தொங்கவிட்டனர்.

தங்களது ஆணைக்குக் கீழ்படியாமலும் கப்பத் தொகையைச் செலுத்தாத பாஞ்சைப் பாளையக்காரர் வீரபாண்டி கட்டபொம்மனையும் கயத்தாறு தூக்கு மரத்தில் ஏற்றி அவரது கடை மூச்சைக் குடித்தனர்.

ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனமாக விளங்கிய மைசூர் மன்னர் திப்பு சுல்த்தானுடன் மூன்றாவது மைசூர் போரில் சமரச உடன்படிக்கை செய்து கொண்டிருந்த பொழுதும், கைக்கூலிகளின் உதவி கொண்டு திடீரெனத் தாக்கி ரீரங்கபட்டணம் கோட்டைப் போரில் 4.5.1799 தேதியன்று கொன்றனர்.

மன்னர் திப்பு சுல்த்தானது தியாக வாழ்வு வீணாகிவிடக்கூடாது என்பதற்காக கர்நாடக மக்களைத் திரட்டி, கர்நாடக மாநிலத்திலிருந்து ஆக்கிரமிப்பாளர்களை ஆங்கிலேயர்களை அடித்து விரட்டப் பாடுபட்ட மக்கள் தலைவன் துந்தியாவாக் என்ற மாலிக் ஜஹான்சாவை கெப்பல் என்ற இடத்தில் பெரும்படையுடன் மோதிக்