பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O7

மாவீரன் மயிலப்பன்

வட்டார வழக்கச் சொற்கள் - விளக்கம்

1. அமில்தார் :

இது ஒரு பாரசீகச்சொல். ஆர்க்காட்டு நவாபின் தமிழக ஆட்சியில் அரசு அலுவலரைக் குறிக்கும் சொல். தாசில்தார் என்ற சொல்லின் பிரயோகம் போன்றது.

2. ஆயக்கட்டு :

இராமநாதபுரம் சீமையிலுள்ள கண்மாய்களின் உட்புறத்தில் அல்லது

கண்மாய்க்கு வெளியே உள்ள கண்மாய் நீரினால் பாசனம் பெறும்

நிலப்பகுதியின் பெயர். இது ஒரு பாரசீக மொழிச்சொல்லாகும்

3. இராப்பிச்சை :

பிச்சை எடுப்பவர்கள் பகல்நேரங்களில்தான் வீடு வீடாகச் சென்று பிச்சை கேட்பர். ஆனால் பகல்நேரங்களில் கிராமங்களில் உள்ள மக்கள் வயல் வரப்புகளில் பணிகளுக்குச் சென்றுவிடுவர். ஆதலால் கிராமங்களில் பிச்சை பெறுவதற்காக, பிச்சைக்காரர்கள் இரவில்தான் செல்வர். அவர்களை மக்கள் இராப்பிச்சை என அழைப்பர்.

4. கச்சேரி:

அயல்மொழிச்சொல், அரசு அலுவலகங்களைக் குறிப்பதாகும். யாழ்ப்பாணத்தில் ஒரு பகுதியைக் குறிப்பதற்கும். சாவகச் கச்சேரி என்று அழைக்கப்பெறுகிறது.