பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O - =மறவர் சீமை

கச்சேரித் திடலில் மக்கள் பத்துநூறு பேர்களாகக் கூடி நின்றனர்.

கிழக்கு வான முகட்டில் சூரியன் முகம் தெரிந்தது. கூடிநின்ற மக்களிடையே ஒரு சலசலப்பு, ஆரவாரம்.

பதினைந்து இருபது பேர் அடங்கிய குழு ஒன்று நாட்டுத்துப்பாக்கியுடன் அங்கு வந்தனர். நொடி நேரத்தில் அவர்கள் வானை நோக்கிச் சுட்டனர். டப். டப். டப்.

மக்களிடையே மகிழ்ச்சி ஆரவாரம். அனைவரும் துப்பாக்கி ஏந்திய இளைஞர்களுடன் கும்பெனியரது கச்சேரிக் கட்டிடத்திற்குள் புகுந்தனர். அங்கே ஆறுதலாகப் படுத்தும், அமர்ந்தும் இருந்த சிப்பாய்களையும், வெள்ளைக்காரத் தளபதிகளையும், பதட்டத்துடன் எழுந்து அவர்களது துப்பாக்கிகளை எடுத்து, மருந்து போட்டு இடித்துக் கட்டுவதற்குள் கூட்டத்தினர் அவர்களைப் பற்றி பிடித்து அங்குள்ள துண்களில் சேர்த்துப் பினைத்தனர். அவர்களது துப்பாக்கிகளையும் பறித்துக்கொண்டு இடுப்பில் இருந்த குத்து ஈட்டி, தோட்டாக்களையும் கைப்பற்றினர்.

அடுத்து கச்சேரித் திடலில் இருந்த சேகரம் பட்டறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கும்பெனியரது நெல் களஞ்சியங்களைச் சூறையாடினர். சிறிது நேரத்தில் நெல் முழுவதும் அகற்றப்பட்ட அந்த பட்டறைகள் பரிதாபமாகக் காட்சியளித்தன

"சரி நேரமாகிறது புறப்படுங்கள், அபிராமம் செல்லலாம்"

இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மறத்தலைவரது கம்பீரமான குரல் அது.

துப்பாக்கி தாங்கிய வீர இளைஞர்களும அந்தக் கூட்டத்தின்