பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_2OB =மறவர் சீமை

5. கிட்டங்கி :

வணிகர்கள் பயன்படுத்தும் சொல். வணிகப்பொருட்களின் சேமிப்பு

கிடங்கினை குறிப்பதாகும். மண்டி, பேட்டை, என்ற சொற்களின் பொருளில்

பயன்படுத்துவது. இதுவும் அயல்மொழிச்சொல்லாகும்.

6. கிள்ளை இலை :

இராமநாதபுரம் சீமை மறவர்களிடம் தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கமாவது. மறவர்தலைவர் ஒருவர் எதிரியுடன் போர் செய்வதற்குமுடிவு செய்தவுடன் தமக்கு நெருங்கிய உறவினர்களுக்கும், தமது அதிகாரத்திற்கு உட்பட்ட நாட்டுத்தலைவர்களுக்கும் ஒரு கிள்ளை இலையில் கருவை மர முள்ளைக் கொண்டு குத்து, பிணைத்து அனுப்புவர் இது அவர்கள் போர் செய்வதற்கு புறப்பட்டு, வரவேண்டம் என்பதற்கான சங்கேதமாகும்.

7. கெட்டா

கெடா என்ற ஆங்கிலச்சொல்லின் மரு.உ. யானைகள் மிகுதியாக உள்ள காடுகளில் அவைகளைப் பிடிப்பதற்காக பெரும் பள்ளங்களை அமைத்து, அதன்மீது உறுதியற்ற மரக்கிளைகளையும், கொண்டு அதன் மூடி வைப்பர். மிரண்டு ஓடும் யானைகள் அந்த பள்ளங்களில் விழுந்து சிக்கிக்கொள்ளும். பின்னர், அந்த காட்டு யானைகளை பழக்கப்பட்ட யானைகள் மூலம் பள்ளங்களிலிருந்து கயிற்றால் பிணித்து, வெளியே கொண்டு வருவர். யானைகளைப் பிடிக்கும் இந்த மறை கெட்டா என வழங்கப்படுகிறது.

8. கையெழுத்து மறையும் நேரம் :

கோடை காலத்தில் சூரியன் மறைந்து, இருள் பரவுவதற்கு முன்னர் உலகை கவி சூழ்ந்து கொள்ளும் மெல்லிய இருளினை குறிப்பதற்கு பயன்படுத்ததப்படும் சொல். அதாவது உள்ளங்களில் அமைந்துள்ள இயற்கையான கோட்டினை-ரேகையினை கண்டுகொள்ள முடியாத நேரம் இது.

9. சக்கரம் :

சேதுபதி மன்னர்களது ஆட்சியில் பொன்னாலான இந்த பணம் செலாவணியில் இருந்தது. இதன் வடிவம் வட்டமாக சக்கரம் என்று அழைத்து வந்தனர். திரவாங்கூர் மன்னரது ஆட்சியில் கேரளநாட்டில், சக்கரம் என்ற பெயரிலான சிறிய செப்புக் காசுகள் புழக்கத்தில் இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.