பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

**= - - =மறவர் சீமை

கிளர்ச்சி தொடங்கி இருபது நாட்களில் இந்தக் கிளர்ச்சிக்காரர்களது எண்ணிக்கை பதினாராயிரத்துக்கும் மிகுதியாக அதிகரித்துவிட்டது." முதுகளத்தூர், கமுதி, திருச்சுழிப் பகுதியில் கும்பெனியாரது நிர்வாகம் தடைப்பட்டு ஸ்தம்பித்தது. இந்தப் பகுதியில் இருந்த கும்பெனி அலுவலர்களும், இராமநாதபுரத்தில் இருந்த கும்பெனி கலெக்டரும் தொடர்பு கொள்ள இயலாத நிலை. கும்பெனிக் கலெக்டரது ஒலைகளுடன் முதுகளத்தூர் பகுதிக்கு வந்த ஏவலர்களைக் கைப்பற்றியதுடன், அந்த ஏவலர்களின் சீருடைகளையும் பறித்துக் கொண்டு, அவர்கள் அணிந்திருந்த கோவனத்துடன் திரும்பி ஓடுமாறு விரட்டி அடித்தனர். கும்பெனியாரது கொத்தடிமைகளாகவும், தொங்கு சதைகளாகவும் செயல்பட்ட அந்த கோழைகளுக்கு நாட்டுப்பற்றுக் கொண்ட மக்கள் உணர்ச்சி வசப்பட்டுக் கொடுத்த தண்டனை அது.

மக்கள் திரண்டு கும்பெனியாரது கச்சேரிகளைச் சூழ்ந்து, கும்பெனி சிப்பாய்களது ஆயுதங்களை ஏன் பறித்தனர்?

இந்த நிகழ்ச்சியைத் தலைமை தாங்கி நடத்திய வீர மறவன் யார்? இந்த வினாக்களுக்கு ஓரளவு பதில் வழங்கும் வகையில் இராமநாதபுரம் சீமை கும்பெனிக் கலெக்டர் சென்னைக் கோட்டையில் உள்ள கும்பெனி கவர்னருக்கு அனுப்பிய கடிதவாசகம் இதோ"

"......... குடிமக்களுக்கு எந்தவித குந்தகமும் விளைவிக்காமல் திடீரென்றும், பரவலாகவும் ஏற்பட்டுள்ள இந்தத் தாக்குதல் ஒரு சாதாரணக் கொள்ளை அல்ல என்ற முக்கியமான செய்தியை சுட்டுவதாக உள்ளது. அதாவது நமது கச்சேரியில் உள்ள துப்பாக்கிகளையும், வெடிமருந்தையும் மட்டும் கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தைக் குறிப்பிடுவதாக உள்ளது. இதனைப்பற்றி தளபதி மார்டின்ஸ்-டன் தீவிரமாக ஆலோசித்த பிறகு இந்த எழுச்சிக்கு காரணம் பதவி நீக்கம் பெற்ற மன்னரது தூண்டுதல்தான் என்பதும் இதனை விரைந்து சமாளிக்காவிட்டால் மிகவும் கெடுதலான நிலைமை

8. Madurai District Record - vol - 1139 9. Collector Lusington Letter dated 30-04.1799 10. Madurai Collectorate Records - vol 1157 p 70