பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- - - 13 மாவீரன் மயிலப்பன்=

எட்டிவிடும்...."

27.04.1799 தேதியிட்ட இன்னொரு கடிதத்தில் கலெக்டர் குறிப்பிட்டிருப்பது, "...இந்தக் கிளர்ச்சியினைத் தலைமை தாங்கி நடத்தியவன் சேதுபதி மன்னரிடம் முன்னர் அரண்மனைப் பணியிலிருந்தவன். எனக்குக் கிடைத்த உளவுச் செய்திகளின்படி அவன் ஏற்கனவே பலமுறை திருச்சிராப்பள்ளிக்குச் சென்று இருக்கிறான். சேதுபதி மன்னரிடம் ஆலோசனை கலப்பதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னர் அவன் இராமநாதபுரத்திற்கு வந்து இருக்கிறான். சேதுபதி மன்னரது ஒப்புதலுடன்தான் இந்த நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக இங்குள்ள குடிகளை நம்ப வைத்து இருக்கிறான். மேலும், மிகுந்த அடாவடித்தனத்துடன் நாட்டுப்புற மக்களுக்கு ஒலைகள் அனுப்பிக் கும்பெனியாரது தொடர்புகளில் இருந்து நீங்குமாறும் தவறினால், தக்க தண்டனைகள் வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளான்.

"...மிகவும் நீண்ட காலம் ஆற்காட்டு நவாபின் நிர்வாகத்தல் இருந்த இந்தச் சீமையை கி.பி.1780ல் எழுந்த மக்கள் புரட்சியின் காரணமாக அப்பொழுது திருச்சியில் கைதியாக இருந்தமன்னர் விடுதலை பெற்றுப் பதவியில் மீண்டும் அமர்த்தப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. ஆதலால், இப்பொழுதும், அத்தகைய கிளர்ச்சியின் மூலம் தனது காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் அவன் ஈடுபட்டுள்ளான்.”.

சென்னைக்கு இராமநாதபுரம் கும்பெனிக் கலெக்டர் அனுப்பிய இந்தக் கடிதங்களில் முதுகளத்தூரில் மயிலப்பன் சேர்வைக்காரரினால், புரட்சிப் பொறி துண்டி விடப்பட்டு முதுகளத்தூர் பகுதி எங்கும் பரவி மக்களிடையே அந்நிய ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளை மலரச் செய்துவிட்டது என்ற உண்மையை யாரும் எளிதில் புரிந்து கொள்ளத் தக்கதாகும்?

11. Madurai Collectorate Records - vol 1157 pp 75-78