பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

=மறவர் சீமை

-

+ = - a m = m in தற்பொழுது கலவரம், முதுகளத்தூர், அபிராமம், கமுதி பாப்பான்குளம் தாலுக்காக்களில் நீடிக்கிறது. குடிமக்களைக் கிளர்ந்து எழுமாறும், இணங்காதவர்களது ஊர்களைக் கொளுத்துவதும் தொடர்கிறது. நமது கைத்தறிக் கிட்டங்கியை அழிவில் இருந்து ஆர்த்திதேவன் ஓரளவு காப்பாற்றி உள்ளான். இராமநாதபுரம் உதவிக் கலெக்டர் கிரீம்ஸ் காமன்கோட்டை வழியாக முதுகளத்துர் செல்கிறார்........ Fo

"முதுகளத்தூர் தாலுகாவில் உள்ள சித்திரங்குடி, ஆப்பனுர், பேரையூர் ஆகிய நாடுகள், அடர்த்தியான காட்டுப்பகுதிகளாக இருப்பதாலும், இங்குள்ள மறவர்கள் கள்ளர்களை விட மிகவும் கொடுமையானவர்களாக உள்ளனர். இவர்கள் சுமார் பதினாயிரம் பேர் இருப்பார்கள். கி.பி.1772ஆம் ஆண்டுப் போருக்குப் பின்னும், கி.பி.1781ல் மிகப்பெரிய விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். அதற்கு உரிய பலனும் இருந்தது........ "12.

இந்த மயிலப்பன் யார். அவர் இந்தக் கும்பெனியாருக்கு எதிராக மக்களை அணி திரட்டி, ஆயுதபாணிகளாக்கிக் கும்பெனியாரது ஆயுதங்களைப் பறித்து, நெல் களஞ்சியங்களையும், கைத்தறித் துணிக் கிட்டங்கிகளையும் சூறையாடியதற்கான பின்னணி என்ன?

12. Collector Lussington's letter dated 06.05.1799