பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்=

=**

3. புதிய பாதை

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த இராமநாதபுரம் பகுதி பாண்டியர்களது பேரரசின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. கடைச் சங்கப் புலவர்களான மாங்குடி மருதனாரும், பிசிராந்தையாரும், அல்லூர் நல்லந்துவனாரும், உப்பூரி குடிக்கிழாரும் இந்தப் பகுதியில்தான் வாழ்ந்து சிறந்தனர். பிற்காலப் பாண்டியப் பேரரசு பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிதைந்து வானாதிராயர் போன்ற தன்னரசு மன்னர்களும், சேதுபதிகள் என்ற மறவரின் மூத்தகுடி மகனும், இந்தப் பகுதியின் சுயேட்சை பெற்ற மன்னர்களான பொழுது இந்தப்பகுதி, மறவர் சீமை அல்லது சேதுநாடு என வரலாற்றிலும் இலக்கியங்களிலும் இட. பெற்றன.

என்றாலும், தில்லி சுல்த்தான் அலாவுதீன் கில்ஜி காலத்தில் அவரது தளபதி மாலிக்காபூர், கி.பி.1311ல் இராமேசுவரம் வரை மின்னல் படையெடுப்பு ஒன்றினை நடத்தி தில்லி திரும்பியபொழுது மதுரைக் கோட்டையில் ஒரு நிலையான படையணியை நிறுத்திச் சென்றான். அன்றிலிருந்து இந்தப் பகுதி " கடந்து செல்லும் பகுதி" என்று பொருள்படும் அரபிச் சொல்லன "மாபார்" என்ற பெயரில் வழங்கப்பட்டது. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் கிழக்குக் கடற்கரைக்கு வந்த