பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

- - = மறவர் சீமை

அரபி வணிகர்ளது இந்த வழக்கு குளச்சல் முதல் நெல்லூர் வரையான கிழக்குக் கடற்கரைப் பகுதியைக் குறிப்பதாயிற்று. மாபார் என்ற பாண்டிய, சோழ மண்டலப் பகுதிகள் தில்லிப் பேரரசின் ஒரு அங்கமாகப் பெயரளவில் அப்பொழுது கருதப்பட்டது." அதனையடுத்து முகலாயப் பேரரசர் ஆட்சியின்பொழுது கி.பி.1691 - 95ல் செஞ்சிக் கோட்டைப் போரில் முகலாயப் பேரரசு பெற்ற வெற்றி மூலம் தமிழக அரசியலில் தில்லியின் ஆதிக்கம் உறுதிப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக தில்லிப் பேரரசின் தக்கானப் பிரதிநிதியான நிஜாமிற்கு செஞ்சி, தஞ்சை, மதுரை நாயக்கர் மன்னர்கள் திறை செலுத்தி வந்தனர். இந்தத் தொகையை வசூலிக்கும் பணியை நவாப் என்ற பட்டத்துடன் நிஜாமின் பணியாளர் ஆற்காட்டில் நிலைகொண்டார். அவரது பெயர் ஜூல்பிகார் அலிகான் என்பது. அவருக்குப் பின்னர், நவாப் பதவி பரம்பரைப் பதவியாக மாறியது. ஒரு காலக்கட்டத்தில் ஆற்காட்டு நவாப் பணிக்கு வாரிசு இல்லாத நிலை ஏற்பட்டபொழுது, அதற்கு ஆற்காட்டு நவாப் தோஸ்து அலி மருகர் சந்தா சாகிபும் ஆற்காட்டில் இருந்த நிஜாமின் அலுவலர் அன்வர்தீன் என்பவரும் போட்டியிட்டனர். பத்து ஆண்டுகள் தொடர்ந்த இந்த போட்டியில் கி.பி.1751ல் அன்வர்தீன்கான் மகன் வாலாஜா முகம்மது அலி இறுதி வெற்றி பெற்று ஆற்காடு நவாப் ஆனார்."

ஆனை மீது அமர்ந்து செல்ல ஆசை? ஆனால், உந்தி ஏறி உட்காரத் திராணி வேண்டுமே! வாலாஜா முகம்மதலி நவாப் ஆகிவிட்டார். ஆனால், கொங்கு நாட்டில் இருந்து நாஞ்சில் நாடு வரை இருந்த எழுபத்தி இரண்டு பாளையக்காரர்களும் முன்னர் மதுரை நாயக்க மன்னருக்குக் கொடுத்து வந்த கப்பத்தொகையை நவாப்பிற்குக் கொடுக்க வேண்டுமே! அப்பொழுது இருந்த குறுநில புதுக்கோட்டை, தஞ்சை மன்னர்கள் நவாப்பின் மேலாதிக்கத்தை மதித்து நடக்க வேண்டுமே! நவாப் பதவிப் போட்டியில் வெற்றி பெற ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கும்பெனியாரது கூலிப் படைகள்தான் பெற்றுத்தந்தது. மீண்டும் மீண்டும் அவர்களை நம்பித்தான் நவாப்

13. Eswari Prasad - History of medieval India 14. Sathianathaier - History of madurai Nayakas 1927