பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

மாவீரன் மயிலப்பன் -

பதவி அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். நவாப் முகம்மது அலியின் இந்த முடிவைத் தொடர்ந்து நவாப்பிற்கும் சென்னைக் கோட்டையில் இருந்து ஆங்கிலக் கவர்னருக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின."

மதுரை, நெல்லைச் சீமைப் பாளையக்காரர்களிடமிருந்து கப்பத் தொகையை வசூலிப்பதற்கு நவாப் முகம்மது அலி தமது தமையனார் மாபூஸ் கானை மதுரை, நெல்லைச் சீமைகளின் ஆளுநராக கி.பி.1752ல் நியமித்தார். இவர் நிர்வாகப் பணியைப் பொறுத்தவரைதான் ஆளுநர். ஆனால், ஆண்டுக்குப் பதினைந்து லட்ச ரூபாய்களை இந்தச் சீமைகளில் குத்தகைப் பணமாக நவாப்பிற்கு செலுத்த வேண்டிய குத்தகைதாரரும்கூட. இந்தக் குத்தகைப் பணத்தில் பாதித்தொகையை நவாப்பிற்கும், பாதித் தொகையைக் கும்பெனியாருக்ககும் செலுத்த வேண்டும் என்ற ஏற்பாடு. ஆனால், மாபூஸ்கான் திருநெல்வேலிச் சீமையை மட்டும் பதினைந்து லட்ச ரூபாய்களுக்கு உட்குத்தகைக்கு விட்டார். ஆனால், பாளையக்காரர்களிடமிருந்து பணம் வசூலிப்பது கல்லில் நார் உறிப்பது போன்று இருந்தது. ஆடிக் கறக்க வேண்டிய மாட்டை ஆடிக் கறக்க வேண்டும். பாடிக் கறக்க வேண்டிய மாட்டை பாடிக் கறக்க வேண்டும் என்ற பாவனையில் மாபூஸ்கான் பலவிதமாகப் பொறுமையுடன் முயன்றார். மதுரைக் கள்ளர்கள், இராமநாதபுரம், சிவகெங்கை மறவர்கள், இவர்களைச் சமாளிக்க வேண்டும். மதுரை நாயக்க அரசு ஆட்சி, திருச்சியில் ராணி மீனாட்சியின் தற்கொலையுடன் கி.பி.1736ல் முடிவடைந்த பிறகு ஏறத்தாழ இருபது ஆண்டுகள் யாருக்கும் கட்டுப்படாத "சுயேட்சை மன்னர்களாக" விளங்கியவர் அல்லவா இந்தப் பாளையக்காரர்கள்.

இதனால் பொறுமையிழந்த ஆற்காட்டு நவாப் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பெனியாருடன் பல உடன்படிக்கைகளைச்

செய்துகொண்டு அவர்களது கூலிப்படையை பாளையக்காரர்களிடம் வசூல் செய்வதற்குப் பயன்படுத்தினர். கி.பி.1755ல் ஜெனரல்

15. Dr. Rajayyan- History of Madurai 1972.