பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ԶC) = - – =மறவர் சீமை

படைகள் சூழ்ந்து கொண்டன." அப்பொழுது மறவர் சீமையின் மன்னரான முத்து இராமலிங்க சேதுபதி பன்னிரெண்டு வயது இளைஞராக இருந்ததால், அவரது பிரதிநிதியான அவரது தாயார் முத்து திருவாயி நாச்சியாருடனும் பிரதானி தாமோதரன் பிள்ளையுடனும் நவாப்பின் மகன் பேச்சுகளைத் தொடர்ந்து, நவாப்பிற்கு கப்பத் தொகையைச் செலுத்துமாறு தெரிவித்தார். ராணி மறுத்த காரணத்தினால் 1.6.1772ம் தேதி, காலையில் கோட்டையைச் சுற்றி நிறுத்தப்பட்ட ஆக்கிரமிப்பாளரது பீரங்கிகள் குண்டுகளை வெடித்துப் பயங்கரமாக நெருப்பைக் கக்கி, இராமநாதபுரம் கோட்டை மதிலைத் துளைத்தன." இரண்டாவது நாள் பீரங்கித் தாக்குதலினால் கிழக்கு மதிலில் ஏற்பட்ட பிளவின் வழியாகக் கும்பெனிப் படைகள் கோடடைக்குள் புகுந்தன. ஆவேசமாக எதிர்த்தாக்குதல் மேற்கொண்ட மறவர்கள் மூவாயிரம் பேரை இழந்த சேதுபதி ராணிக்கு தோல்வி ஏற்பட்டது. அவரையும் இளவரசரையும் அவரது தமக்கையையும் கைது செய்த பரங்கியர் அவர்களைத் திருச்சிக்ள கோட்டைக்கு அரசியல் கைதிகளாக அனுப்பி வைத்தனர். சேதுபதி சீமை ஆற்காட்டு நவாப்பின் ஆட்சியின் கீழ் வந்தது.

ஏறத்தாழ பத்து ஆண்டுகள் இராமன் இல்லாத அயோத்தி போல மறவர் சீமை மாற்றாரது ஆட்சியில் சீரழிந்தது. என்றாலும், மார்ச் 1781ல் இளைய சேதுபதி மன்னரைத் திருச்சிக் கோட்டையில் இருந்து விடுத்த ஆற்காட்டு நவாப், சேதுபதியுடன் சேதுநாட்டின் வடக்கே கோட்டைப்பட்டினத்தில் சமரச உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார்., இதன்படி ஆற்காட்டு நவாப்பின் மேலாண்மையை மதித்து ஆண்டுதோறும் ரூபாய், இரண்டரை லட்சம் அன்பளிப்பு தொகை சேதுபதி மன்னர் நவாப்பிற்குச் செலுத்த வேண்டும். மறவர் சீமை வரலாற்றில் இது ஒரு கரும்புள்ளி. ஆனால், அன்றைய அரசியல் சூழ்நிலையில் சேதுபதி மன்னரைவிட பெரிய அரசர்களான திருவாங்கூர், தஞ்சாவூர், மதுரை அதிபர்களே இத்தகைய நிபந்தனையை ஏற்றிருந்தனர், என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த பதினான்கு ஆண்டுகள் சேதுபதி மன்னரது ஆட்சி தொடர்ந்தது.

19. VIBART - Lt. Col. History of Madras Engineers 20. Dr. Rajayyan - History of Madras Engineers 21. Military Consultations vol. 03-06-1772 22. Military Consultations vol. 74 30-04, 1981 p. 1076