பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன் - -

தம்மையும், தமது தாயார், தமக்கையாரைத் திருச்சிச் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தி சேதுபதிகளது பரம்பரைக்கு இழுக்கை ஏற்படுத்திய கும்பெனியாரையும் நவாப்பையும் இளம் மன்னர் மறந்துவிடவில்லை. தமக்குத் தொல்லை கொடுத்தவர்களை யானை எப்பொழுதாவது மறந்தது உண்டோ? இல்லை. புனித சேது மண்ணில் இருந்து அந்நியப் பூண்டுகளை அடியோடு அகற்றுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டார். முன்னர், திருப்புல்லாணியில் புதிய கோட்டை ஒன்றை அமைத்து பாதுகாப்பைப் பலப்படுத்தினார். அப்பொழுது சேதுநாட்டில் கைத்தறித் துணிகள், தானியங்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வணிகத்தில் ஈடுபட்டிருந்த டச்சுக்காரர்களுடன் தொடர்புகொண்டு பெரிய பீரங்கிகளைத் தயாரிக்கும் பணியில் முனைந்தார்.’ இவருக்கு முன்னரும் அரசு கட்டிலில் இருந்த முத்து விஜய ரகுநாத சேதுபதி டச்சுக்காரர் உதவியுடன் பீரங்கிகளைப் பெற்று தஞ்சைப் போரில் அவைகளைப் பயன்படுத்தி இருந்தார். அன்றைய சூழ்நிலையில் வீரத்தையும், வல்லமையையும் நிலைநிறுத்த வெடிமருந்து ஆயுதங்களான துப்பாக்கிகளும், பீரங்கிகளும் தவிர்க்க முடியாத போர்க் கருவிகளாக விளங்கின. i

இது ஒரு புறமிருக்க, ஆற்காட்டு நவாப்பின் பிரதிநிதிகள் என்ற முறையில் கும்பெனியார் சேதுபதிச் சீமையில் வணிகம் செய்ய சிறப்பான சலுகைகளையும், கைத்தறித் துணிகளைக் கொள்முதல் செய்வதில் ஏகபோக உரிமையையும், பாம்பன் கால்வாயில் அவர்களது கப்பல்களைத் தணிக்கையில்லாமலும் தாமதமில்லாமலும் செல்வதற்கான முன்னுரிமையையும் சேதுபதி மன்னரிடமிருந்து எதிர்பார்த்து ஏமாந்தனர். இதற்கும் மேலாக இராமநாதபுரம், சிவகெங்கை சீமை எல்லைப் பிரச்சினைகளில் தீர்ப்பு வழங்கும் நடுவராக இருக்கவும் முனைந்தனர். இவையனைத்தும் மறவர் சீமை மன்னரது சுய ஆதிக்கத்தன்மைக்கு, சுதந்திரச் செயல்களுக்கு

23. Military Consultations 1795