மாவீரன் மயிலப்பன் - - –29
கருதி, அவர்களது நிலங்களை அளவை செய்து கூடுதல் தீர்வை விதிக்க கும்பெனியார் அப்பொழுது முற்பட்டனர். இந்த முயற்சிக்கு குடிமக்கள் ஒத்துழைப்பு நல்காமல் பார்த்துக் கொண்டார். தொடர்ந்து தாங்க முடியாத நிலத் தீர்வையை விதித்து, அதனை அக்கிரமமான முறையில் வசூலிக்க முயன்ற கும்பெனி அலவலர்கள் வயிறு வளர்க்க எதையும் செய்ய முற்படும் கைக்கூலிகளது முயற்சிகளுக்கு எதிராகக் குடிகள் அணி திரண்டு, அமைதியாகத் தங்களது எதிர்ப்பினைத் தெரிவிக்குமாறு செய்தார்.
இந்த இயக்கம் சித்திரங்குடி சேர்வைக்காரர் எதிர்பார்த்தபடி தக்க இழப்பினைக் கும்பெனியாருக்கு ஏற்படுத்தியதை மதுரை மானுவலில் இவ்விதம் குறிப்பிடப்பட்டுள்ளது."
"சீமையின் வருமானம் பெருத்த அளவில் குறைந்தது. கி.பி.1795-96ம் ஆண்டில் ரு.1,37.207 ஆகவும், கி.பி.1796-97ல் ரூ.1,33,391-ஆகவும், இருந்த வருமானம் ரூபாய். 94,882- ஆகவும், கி.பி.1798-99ல் ரூ.65,1271- ஆகவும் குறைந்து விட்டது. சிறையில் அடைபட்டுள்ள சேதுபதி மன்ரை மீண்டும பதவிக்கு கொண்டு வரவேண்டும் என்ற இலக்கில் 23.7.1797ல் தொடக்கம் பெற்றது போன்ற புதிய கிளர்ச்சி கும்பெனியாருக்கு எதிராக உருவாகியது."
மேலும், இந்தக் கிளர்ச்சி பற்றித் திருநெல்வேலி சீமைச் சரித்திரத்தில் ".................. இராமநாதபுரம் சீமையில் கலகமொன்று கி.பி.1797ல் நிகழ, அக்காலத்தில் திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள பாளையக்காரர்களில் பெரும்பாலோர் பாஞ்சாலக் குறிச்சியாரின் சொல்லுக்கிணங்கி, கலகத்துக்குக் въп т6оитшоп бъ நின்ற இராமநாதபுரத்தாருடன் சேர்ந்துகொண்டு செலுத்த வேண்டிய கிஸ்தியை கவர்மெண்டுக்குச் செலுத்த மறுத்து விட்டனர்."
ஆனால், இவையனைத்திலும் பின்னணியாக அமைந்து இருந்த நியாய உணர்வுகளை சிறிதும் மதிக்காது மமதையுடன் தங்களது
25. Madurai Manual priv - chVII - p-155. 26. Manual of Ramnad Samasthanam 1891. 27.திருநெல்வேலிச் சீமைச்சரித்திரம்- 1928 பக் 214.