பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன் - -- 27

தலைமுறை, தலைமுறையாக அவர்களது இதயக் கோவிலில் இடம் பெற்றுள்ள மறவர்குடியின் மூத்த தலைமகன் சேதுபதி ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்த வேண்டும். இந்த இரு பெரும் இலக்குகளை எய்த ஆயுதமேந்திச் சித்திரங்குடி சேர்வைக்காரர் தலைமையில் போராடப் புறப்பட்டு விட்டனர்.

முதுகுளத்துார் கச்சேரியில் துப்பாக்கிக்குண்டு வெடித்து இருபத்துஐந்து நாட்களாகிவிட்டன. கும்பெனிப் பிரதிநிதியான இராமநாதபுரம் கலெக்டரும், அவரது எடுபிடிகளும் எந்த வழியிலும் முதுகளத்துார் வட்டார நாடுகளுக்குள் நுழையவே முடியாத நிலை. கிளர்ச்சிக்காரர்களது நிலையைத் தெரிந்துகொள்ள மாறுவேடங்களில் சென்ற கலெக்டரது ஏவலர்களும் கிளர்ச்சிக்காரர்கள் கையில் அகப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டுத் திரும்பினர். இதனால், பெரிதும் கவலையுற்ற இராமநாதபுரம் கலெக்டர் பாளையங்கோட்டையில் அப்பொழுது நிலை கொண்டிருந்த இராணுவ அணிகளை அவசரமாக அனுப்பி வைக்குமாறு பாளையங்கோட்டை ராணுவ மையத்தில் இருந்த ஆங்கி ல அலுவலரைக் கோரினார்.

முதுகளத்தூர், கமுதி, அபிராமம், தாக்குதல்களின்பொழுது சித்திரங்குடி சேர்வைக்காரர் இருநூறு பேர் மட்டும்தான் இருந்தனர். அறுபது துப்பாக்கிகளும், நாற்பது வெடிகளும் மற்றும் ஈட்டிகள், வாள்களும்தான் இருந்தன. இப்பொழுது அவரது அணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். பள்ளிமடம், மற்றும் அதன் சுற்றுப்பகுதி மக்களும் கிளர்ச்சியில் பங்குகொண்டனர். இவ்விதம் பரங்கியருக்கு எதிராக கிளர்ச்சியில் மிகுந்த ஈடுபாட்டுடன் மக்கள் கலந்து கொண்ட விபரம் இராமநாதபுரம் கலெக்டரது கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சித்திரங்குடி, பேரையூர் ஆப்பனூர் நாடுகளில் மிகவும் அடர்த்தியான காடுகள் சூழ்ந்து இருப்பதாலும், இங்குள்ள மக்கள் கள்ளர்களை விடப் பன்மடங்கு கொடுரமான குணமுள்ளவர்களாக இருப்பதாகவும், தன்னிச்சை

28. MDR VoI 1157 Collector Letter 06.05.1799.