பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 O - - மறவர் சீமை

அப்பொழுதும் இருந்து வந்தன என்பதைத்தான் கலெக்டரது விளம்பரம் தெரிவிக்கிறது. இதற்குத் தக்க பலனும் விளைந்தது.

ஆப்பனூர் நாட்டு மறவர்களில் சிலரும் சித்திரங்குடி ஊர் மக்களில் சிலரும், மக்கள் கிளர்ச்சியில் கொண்டிருந்த பிடிப்பைத் தளர்த்தியவர்களாகப் பரங்கியர் அணிப்பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பி, என்ன ஆதாயம் கிடைக்கும் எனச் சிந்திக்கத் தொடங்கினர், மனிதாபிமானமற்ற பிறந்த மண்ணின் மீது சிறிதும் பாசம் இல்லாத

சுயநலப்பிண்டங்கள்.

மதுரையில் இருந்து பள்ளிமடத்திற்கு தனது படைகளுடன் வந்த லெப்டி கர்னல் டிக்பர்ன் கிளர்ச்சிக்காரர்களைப் பற்றி உளவு அறிவதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். முதுகளத்தூர் கிளர்ச்சிக்காரர்களுடன் நாகலாபுரம், எட்டையாபுரம் பாளையங்களில் இருந்து வந்த இருநூறு பேர் இணைந்துகொண்டு செயல்படுகின்றனர் என்ற செய்தி அவருக்குக் கிடைத்தது. தம்முடன் கொண்டு வந்த பதினெட்டுப் பேரல் (பீப்பாய்) வெடி மருந்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ எதிரிகள் கையில் சிக்கி விட்டால் ஆபத்தாகி விடுமே என்ற கவலை அவருக்கு அடுத்துக் கிடைத்த தகவல்.

இராமநாபுரம் சேதுபதி மன்னரது அமைச்சராக இருந்த முத்தையா பிள்ளையின் சகோதரர் முதுகளத்துார் முத்துக் கருப்பப் பிள்ளைக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. இந்தக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள சித்திரங்குடி சேர்வைக்காரர் மற்றும் சிங்கன் செட்டி ஆகியவர்களைவிட கும்பெனியாரது மிகவும் கடுமையான பலமான எதிரி அவர் எனத் தெரிகிறது.

இன்னொரு செய்தி, நேற்று இரவு பத்து மணிக்கு மேல் கிடைத்த ஓலைச் செய்திப்படி ஐநூறுக்கும் அதிகமான போராளிகள் வெள்ளக்குளம் அருகே தங்கி இருக்கின்றனராம். கமுதிக்