பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.1

மாவீரன் மயிலப்பன் - - -

கோட்டையையும் கோட்டைக்கு எதிரே ஆற்றின் எதிர்க்கரையில் உள்ள பேட்டையையும் தாக்கும் திட்டத்துடன் இருந்தனர். ஆனால், அன்று முற்பகல் வரை எவ்விதத் தாக்குதலும் கமுதியில் ஏற்படாததால், அவர்களைத் தொடர்ந்து அன்று பிற்பகலில்தான் நகரத்தார் குறிச்சிக்கும், பின்னர் வெள்ளக்குளத்திற்கும் செல்லப் போவதாக கலெக்டருக்குத் தெரிவித்தார்.

இராமநாதபுரம் கலெக்டர் உடனடியாக எட்டயபுரம் பாளையக்காரர்களுக்கு கடிதம் அனுப்பி, அவரது குடிமக்கள் யாரும் முதுகளத்துர் போராளிகளுடன் ஒத்துழைக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு செய்தார். அத்துடன், தளபதி டிக்பர்ன் கோரியவாறு பிடிக்கப்பட்ட போராளிகளை இராமநாதபுரம் சிறையில் வைக்க ஏற்பாடு செய்ததுடன், கண்டி மடத்துக்கு பத்து பேரல் வெடிமருந்தும், பதினைந்து கலம் அரிசியும் அனுப்பி வைத்தார். அன்றைய நிலையில் சுதேசிச் சிப்பாய்கள் நாளொன்றக்கு இரண்டு வேளையும் நல்ல சாப்பாடு சாப்பிட்டால்தான் நன்றாக சண்டையிட முடியும். இத்துடன் இந்தச் சோற்றில் அவர்கள் அறிந்து கொள்ள இயலாத வகையில் போதைப் பொருளான கஞ்சாவையும், கலந்தால் மூர்க்கம க சண்டையிடுவதற்கு உதவும் என்பது பரங்கிகள் அறிந்து இருந்த ரகசியம்.