பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.3

மாவீரன் மயிலப்பன் - =

முதுகளத்தூருக்கு சுற்றுப் பாதையில் அனுப்பி வைத்தார். இந்த அணி, இராமநாதபுரத்தில இருந்து தென் மேற்காகச் செல்வதற்குப் பதில் வடமேற்காகக் காமன்கோட்டை என்ற ஊருக்குச் சென்று அங்கிருந்து தெற்காக முதுகளத்துார் சென்றது. கிளர்ச்சிக்காரர்கள் கண்ணில்படாமல் இருக்க. ஆனால் இந்தத் திட்டத்தையும், கிளர்ச்சிக்காரர்கள் நிலை குலையச் செய்தனர். இந்த அணியினர் எடுத்துச் சென்ற ஐம்பது துப்பாக்கி மற்றும் முன்னுாறு ஈட்டிகளில் பெரும்பாலானவற்றைக் கிளர்ச்சிக்காரர்களிடம் பறிகொடுத்துவிட்டு அவர்கள் இராமநாதபுரம் திரும்பினர். இப்படை தோற்கின், பின் எப்படை வெல்லும்?..... இதுதான் கலெக்டர் லூவிங்டனது கவலை.

இதற்கிடையில் மதுரையில் இருந்து வந்த கும்பெனித் தளபதி டிக்பர்ன் தலைமையில் வந்த அணியினர் கொண்டுவந்த இரண்டு 1.1/ 2 பவுண்டர் பீரங்கிகள் பழுதடைந்து பயனற்ற நிலையில்இருந்ததால், நன்கு இயங்கக்கூடிய பீரங்கிகளுடன் வேறு அணியொன்றை பாளையங்கோட்டையில் இருந்த தளபதி பானர்மேன் திருச்சியில் உள்ள ராணுவத் தலைமைக்குத் தகவல் கொடுத்துவிட்டு அவாது அணியுடன் மதுரை வழியாகப் பள்ளிமடம் அடைந்தார். அங்கிரு. த தளபதி டிக்பர்னின்அணியையும் இணைத்துக்கொண்டு, 24.05.1799 பழமானேரிக்கும், பின்னர் 26.05.1799ம் தேதி கமுதிக் கோட்டைக்கும் வந்த இந்த அணியில் மூன்று பவுண்டு பீரங்கிகள் கொண்ட தனிப்படைதான் கும்பெனியாரது உயிர் நாடியாக விளங்கியது."

இதிலிருந்து ஒரு அணி பிரிக்கப்பட்டு, வீரசோழனுக்கு அனுப்பப்பட்டது. கிளர்ச்சிக்காரர்கள் ஏராளமாக அங்கு நிலைகொண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலில் அவர்கள் பயங்கரமாக ஆயுதபாணிகளாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தக் கிளர்ச்சிக்காரர்களை எவ்விதம் சமாளிப்பது என்ற திடடமும் உடனே வரையப்பெற்றது. கும்பெனிப் படைகள் மூன்று அணிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு அணி நேரடியாக வீரசோழன் ஊருக்குச் செல்லவேண்டும். மற்ற இரண்டு அணிகளும் ஊரின்

30. MD 253A / 72 dated 17.05.79. P.3426 dated 29.05.79.

பானர்மேன் கடிதம் 29.05.79. P 3246.