பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

மாவீரன் மயிலப்பன்= o -

புனித மன்னர், பிரெஞ்சுநாட்டுப் பொறியாளரது திட்டப்படி குண்டாற்றின் வடக்குக் கரையில் இயற்கையான பாறைகள் நிறைந்த தளத்தில் மூன்று சுற்று மதில்களுடன் வட்ட வடிவில் அமைத்தார். கி.பி.1770ம் வருட ஆங்கிலேயரின் ஆவணத்தில், இந்தக் கோட்டை இராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமான எட்டுக்கோட்டைகளில் ஒன்றாகவும், இராமநாதபுரம் கோட்டைக்கு அடுத்த நிலையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டு இருப்பதுடன், குண்டாற்றுப் போக்கிற்கும் மிகவும் அடர்த்தியான காட்டுப் பகுதிக்கு நடுவில்

அமைந்து இருப்பதாகவும் வரையப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையை நன்கு வலிமைமிக்க அமைப்பாக பரங்கியர் மாற்றியிருந்தனர். அவர்களது சிறந்த அரண்களான

பாளையங்கோட்டைக்கும், இராமநாதபுரத்திற்கும் இடையில் முதுகளத்துார் கிளர்ச்சி தொடங்கிய பிறகு கடந்த மூன்று வாரங்களாக இந்தக் கோட்டைப் பாதுகாப்பை உடைத்துக் கும்பெனி அணியினை அழித்து ஒழிப்பதற்கான திட்டத்தைச் சித்திரங்குடி சேர்வைக்காரர் வரைந்து இருந்தார். ஆதலால், சண்டை கடுமையாக நடந்தது. இரு தரப்பினரும், மிகுந்த உத்வேகத்துடனும் தாக்குதலில் ஈடுபட்டனர் உச்சிவேளை தாண்டி பிற்பகல் நெருங்கிக் கொண்டு இருந்தது. கிளர்ச்சிக்காரர்களது துப்பாக்கிச் சூட்டினை கோட்டைக்குள்ளிருந்து புறப்பட்டு வந்த பீரங்கிக் குண்டுகள் வாயடைத்து விடுமாறு செய்தன. கிளர்ச்சிக்காரர்கள் களைத்துச் சோர்ந்து விட்டனர். அடுத்து என்ன செய்யலாம் என்று பேசி முடிவு எடுத்துக் கொண்டிருக்கும்பொழுது மேற்குத் திசையில் ஓர் ஆரவரம் கேட்டது. படையணி ஒன்று நாராயணபுரம் அருகே கும்பெனிக் கொடிகளுடனும், ராணுவ வாத்திய ஒலியுடனும் கோட்டையை நோக்கி வருவதும் தெரிந்தது.

ஆம், அது கும்பெனியாருடைய படை அணிதான். கமுதிக் கோட்டையை நெருங்கி வந்தபொழுது அந்த அணியினரைப் பற்றி முழுமையாக அறிய முடிந்தது. அணிக்குத் தலைமைபெற்று வருபவர் கலெக்டர் லூவிங்டன். ஒரு சில வெள்ளைக்காரர்களைத் தவிர மிகப் பெரும்பாலானவலர்கள் மறவர்கள், கள்ளர்கள். ஆம். சிவகெங்கைச்