பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

-- மறவர் சீமை

சீமை குடிமக்கள். என்ன கொடுமை! மண்ணின் மாண்பை, மகத்தான பெருமையைக் காப்பாற்ற மறவர்சீமை மக்களது மூத்தகுடிமகனான சேதுபதி மன்னருக்கு ஏற்பட்ட இழிவைப் போக்க தங்களது உதிரத்தைக் கொட்டி உயிரைக் கொடுததுப் போராடிக் கொண்டிருக்கும்பொழுது மறவர் சீமை மக்களுக்கு இப்படி ஒரு இடைஞ்சலா? தம்முடன் இணைந்து நின்று போராடவேண்டிய நமது இனத்தவர், குலத்தவர், சகோதரர்கள் மான, நாண உணர்வுகள் இல்லாமல் வெள்ளைப் பரங்கியரின் பின்னே வழி நடந்து வருகின்றனர்! நம்மை அழிக்க!! ஒரு கணம் இப்படித்தான் சித்திரங்குடி சேர்வைக்காரரும், அவரது கூட்டாளிகளும் நினைத்தனர். ஆச்சரியத்தால் அதிர்ந்து போயினர். இதைப்பற்றிக் கவலைப்பட்டு பயன் இல்லை. வெள்ளம் தலைக்கு மேல் ஓடுகிறது. நீரும், காற்றும் போல நிச்சலனமாக சுதந்திரத்தினை அதே மண்ணுக்கே உரிய தன்னுரிமையை, நமக்கு முன்னால் வாழ்நது முடிந்த முந்தையோரது வழிவந்த பெருமையை நிலைநாட்ட இறுதிச்சொட்டு இரத்தம் உள்ளவரை போராட வேண்டியது தான். எதிர் அணியினர் யாராக இருந்தால் என்ன? இந்த அணியைப் பொருத என்ன உத்தி?

வெறுப்பு நிறைந்த அவர்களது இதயத்தைப் போல வெஞ்சினத்தால் அவர்களது வாயிதழ்கள் துடித்தன. கரங்களிலும், கால்களிலும் ஒரு புதிய தெம்பு போர்களத்தில் ஒப்பாரியா? எதிரிகள் நம்மவர்கள் இல்லை. அவர்கள் எதிரியின் கைப்பாவைகள். எதிரிகள், நம்மை அழிக்க வருபவர்கள். நம்மவர்களாக இருக்க முடியுமா? அல்ல. பகைவர்களின் கூட்டாளிகள். அவர்களைப் பொருதி, அழிப்பதுதான் நமது தர்மம். அடுத்த கணம் மறவர்களுக்கே உரிய போர் முழக்கம். கிளர்ச்சிக்காரர்களது உள் வயிற்றினின்றும் வெளிவந்து ஒரே குரலில் ஒலித்தது. விண்ணை முட்டும் பயங்கரமான அந்தப் போர் முழக்கத்தில் மறவர் சீமையின் பேரும், புகழும் மறவ இனத்தின் மான உணர்வும் எதிரொலித்தன. நாள் முழுவதும் போராடித் தளர்ந்தவர்கள் வீறு பெற்றனர். "வெட்டுங்கள் குத்துங்கள்" போர் மீண்டும் உக்கிர நிலையை அடைந்தது. உடலில் தெம்பு இல்லை. ஆனால்,