பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்= - –95

9

உள்ளத்தில் ஊறிய உணர்வு பகைவரை அழிக்க வேண்டும் என்ற உந்துதல். கிளர்ச்சிக்காரர்கள் போராடினர். உக்கிரமமாகப் பலன் இல்லை. கமுதிக்கு வடகிழக்கே உள்ள கீழ்க்குளம் காட்டை நோக்கி சண்டையிட்டவாறு பின்வாங்கினர். சிவகெங்கைப் பிரதானி சின்னமருது சேர்வைக்காரர் மகனது தலைமையில் சிவகெங்கைச் சீமைப் போர் வீரர்கள் அணி மூர்க்கமாகப் போரிட்டது. தறிபட்டுஓடும் முயல்களை, வெறிகொண்ட ஓநாய்கள் விரட்டித் தாக்குவது போல். ஏற்கனவே, போராடிக் களைத்துப் போயிருந்த கிளர்ச்சிக்காரர்களால் அவர்களது தாக்குதலைச் சமாளித்து நிறுத்த இயலவில்லை. வழியெங்கும் பிணக்காடு. கல், தச்சனது சிற்றுளியில் சிதைந்து பின்னப்பட்ட கவின்மிகு சிற்பங்கள் போல, ஆங்காங்கு போர் வீரர்களின் சடலங்கள். இவர்களில் முப்பது சடலங்கள் மட்டும் கிளர்ச்சிக்காரர்களது. ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயத்துடன் கீழ்க்குளம் நோக்கிச் சென்றனர். நாற்பது பேர் எதிரியின் பிடியில் அகப்பட்டுத் தவித்தனர். சிங்கன் செட்டி தலைமையில் நின்று கோட்டை அருகே போராடிய அணி முழுமையாகப் பரங்கிப் படைகளால் அழிக்கப்பட்டு விட்டது. அவர்களது தலைகளைத் தனியாக வெட்டி எடுத்து நீண்ட வேல் கம்புகளின் நுனியில் சொருகியவாறு சில கிராமங்களில் நட்டு வைத்தனர். அதனைப்பார்த்துப் பயந்த மக்களைக் கிளர்ச்சிக்காரர்களிடமிருந்து தனிமைப்படுத்த பயமுறுத்தும் திட்டமாகும்.

தோல்வியினால் ஏற்பட்ட வேதனையுடன் தனது வலது கை போன்று இந்தக் கிளர்ச்சியில் வீராவேசத்துடன் இயங்கிய சிங்கன் செட்டியின் வீர மரணத்தையும எண்ணி, எண்ணி வருந்தியவாறு சித்திரங்குடி சேர்வைக்காரர் தனது பரிவாரங்களுடன் கிழக்கே காக்கூர் நோக்கிச் சென்றார்.

மறவர் சீமையின் வெள்ளைப் பரங்கி நிர்வாகத்தை நாற்பத்து இரண்டு நாட்கள் பயங்கரமாக உலுக்கிய இந்த மக்கள் கிளர்ச்சி தோல்வியுற்றது. இந்தச் சீமை மறவர்கள் கொட்டிய இரத்தம், வீர