பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4C) =மறவர் சீமை

வழிபாடாக விளங்கிய உயிர்க்காணிக்கை அனைத்தும் வீணா? அல்ல!

காலச் சுழற்சியின் சுவடுகளில் அநீதி, அக்கிரமம், அரசியல் கொடுமைகள் மட்டுமல்லாது நாட்டுப்பற்று, சமூக நீதி, நியாய உணர்வுகள் ஆகியவைகளும் கூட நசுங்கி மண்ணோடு மண்ணாகக் கலந்து விடுகின்றன. இதில் கொட்டப்பட்ட குருதி, கண்ணி, மக்கி மறைந்த தியாகம் ஆகியவை மீண்டும் நரகாசுரனைப்போல நாளையே உயிர்த் தெழுவதுடன் மக்களின் மகத்தான வெல்லும் சக்தியாக மறு உருப் பெறுவது நிச்சயம்!

காடுகள் அழிந்துதான் நாடுகளாகி இருக்கின்றன. வீடும், வயலும், தோட்டமும், துரவும் ஒருநாளில் ஏற்பட்டவை அல்லவே! எத்துணையோ நாட்கள், எத்துணையோ பேர் தொடர்ந்து செய்த உழைப்பு எய்திய பெரும் இழப்புகள்!

முன்னிருந்தவர்கள் மறைய, பின் வந்தவர்கள் முன்னவர் பணியை, பெருமையைப் போற்றி உரிமை பெறுகின்றர். சாதனை படைக்கின்றனர். சரித்திரத்தில் நிற்கின்றனர்.

இதற்கு இடர்ப்பாடு எழும்பொழுது எல்லாம் மக்கள் சக்தி திரண்டு. மகோன்னத உருப் பெறுகிறது.

பகலவன் வெளிச்சம் குறையும்பொழுது இருட்டு, எப்பொழுதுமே இந்த இருட்டு பூமியைப் பற்றிக் கொண்டு நிற்பதில்லையே! ஒரு சில மணிநேரம் கழித்து மீண்டும் கதிரவனின் கவின் ஒளி உலகு முழுமையும் ஒளி வெள்ளத்தில் மிதக்கச் செய்கிறது.

காலத் திசையில் சில கீறல்கள், வேதனையும், விரக்தியும் விரவிய பயணம். فابی நாளை அவைதானே வரலாறு அந்த யுகப் பிரளயம் அப்பொழுது முதுகளத்தூர் சீமையில் நிகழ்ந்து கொண்டிருத்து......