பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மறவர் சீமை

கள்ளக்குளத்தில், உலகனோடையில், ஆனையூரில் கும்பெனிப்படைகள் குடிமக்களை இம்சித்த நிகழ்ச்சிகள். குண்டுகுளம், பாப்பான்குளம் ஆகிய ஊர் மக்கள் இன்னும் முந்தைய வெறியுணர்வுடன் கும்பெனிக் கூலிகளைத் தாக்கியதில், அந்தப் பகுதி முழுதும் கும்பெனிப்படை தாக்கியவர்களைத் தேடும் முயற்சியாக ஊர்மக்கள் அனைவரையுமே இழிவுபட நடத்தி, தலைகுனிய வைத்த தகாத அக்கிரமங்கள். தங்கு தடையின்றி மேற்கொண்ட பரங்கிகளைத் தட்டிக் கேட்கும் திராணி யாருக்குமே இல்லை. நியாய உணர்வு பெற்ற நெஞ்சங்களிலும், நீதி மறைந்து விட்டது.

அடுத்து முதுகளத்துரைச் சுற்றிலும் பலமான கோட்டை ஒன்றை அமைக்க கும்பெனித் தளபதி பானர்மென் சென்னையில் உள்ள கவர்னருக்கு ஆலோசனை அளித்து இருப்பதாகவும், முதுகளத்தூரில் கும்பெனியாரது படையணி நிரந்தரமாக நிலை கொள்ளும் நிலையான பாசறை ஒன்று அமைக்கப் போவதாகவும் சொல்லிக் கொண்டனர். s

இன்னொரு செய்தி, கமுதிக் கோட்டைச் சண்டையிலும், கீழ்க்குளம் காட்டுச் சண்டையிலும் கும்பெனியாருக்குப் பக்கபலமாக நின்று போரிட்டு கிளர்ச்சிக்காரர்களை அழித்த சிவகெங்கைச் சீமை சின்ன மருது சேர்வைக்காரரின் பிரதானி மகனுக்கு சென்னைக் கோட்டையில் கும்பெனிக் கவர்னர் பாராட்டு விழா நடத்த இருப்பதாகவும், போரில் பங்கு கொண்ட சிவகெங்கை வீரர்களுக்கு கூடுதல்படி அன்பளிப்பாக வழங்க இருப்பதாகவும் பேசிக்கொண்டனர். தியாகிகளைவிட துரோகிகளுக்குத்தானே பாராட்டும், புகழ்ச்சியும அதிகம்! நாட்டுப் பற்று அற்ற அந்தக் கூலிகள்தான் ஏகாதிபத்திய வாதிகளின் ஏறுபடிகள்!

அதற்கு மேலும், குமாரக்குறிச்சியில் தங்கி இருக்க மனம் ஒப்பாமல் சித்திரங்குடி சேர்வைக்காரர் அங்கிருந்து மேற்கு நோக்கிப்