பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

மாவீரன் மயிலப்பன் = –

புறப்பட்டார். முதுகளத்துர் செல்லாமல் சித்திரங்குடி செல்லும் வழியில் இளஞ்செம்பூரில் அந்த ஊர்த் தலைவர் பண்டாரத் தேவரது மகனைச் சந்தித்தார். அப்பொழுது அவர் தெரிவித்த செய்தி இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. நடைபெற்று முடிந்த கிளர்ச்சியில் பங்குகொண்ட அனைத்து குடிமக்களுக்கும் ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக கும்பெனியார் பொது மன்னிப்பு வழங்கி இருப்பதாகவும், மக்கள் கும்பெனியாருடன் ஒத்துழைத்து நாட்டில் அமைதி நிலவ உதவவேண்டும் என்ற அறிவிப்புகள் முதுகளத்தூர் சந்தையில் ஒட்டப்பட்டிருப்பது இன்னும் சுற்று வட்ட ஊர்களிலும் பறை கொட்டி இந்த விபரத்தை தெரிவித்தும் வருகின்றனர் என்ற செய்திதான் அது. மேலும், இந்தப் பொதுமன்னிப்பு சித்திரங்குடி சேர்வைக்காரருக்கும், முதுகளத்தூர் முத்துக் கருப்ப பிள்ளைக்கும் ஏற்புடையது அல்ல என்றும் அதில் குறிப்பிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.,

சேர்வைக்காரருக்குப் புரிந்து விட்டது. பாம்பு காலைச் சுற்ற ஆரம்பித்து விட்டது. அது கடிக்காமல் விடாது! ஆதலால், சொந்த ஊருக்குச் செல்வது அங்கே காத்திருக்கும் கும்பெனிக் கூலிகள விரித்து வைத்துள்ள வலையில் சிக்கிக் கொள்வதாக முடியும், வேறு வழி இல்லை! அப்படியானால் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன? நிதானமாக - ஆறுதலாக முடிவு செய்ய வேண்டியதொன்று. ஆதலால் முதுகளத்தூர் பகுதியின் தென்பகுதியில் உள்ள காடல்குடி பாளையத்திற்குக் கடலாடி வழியாகச் சென்றார். அதுவும் அண்மைக் கிளர்ச்சியில் கும்பெனியாருக்கு எதிராகக் கலகக்கொடி உயர்த்திய ஊர். அங்கும் அதிக நாட்கள் தங்க இயலவில்லை. அங்கிருந்து பிள்ளையார் குளத்திற்கும், பின்னர், பாஞ்சாலக் குறிச்சியைச் சேர்ந்த வில்லார்குளத்திற்கும் சென்றார். அங்கும் ஒரு வாரம். அப்பொழுது ஒரு முடிவுக்கு வந்தார். மறவர் சீமையை விட்டுச் சென்று சிலகாலம் பஞ்ச பாண்டவர்களைப் போன்று "தலைமறைவு வாசம்" மறைந்து வாழ்வது. கும்பெனியார் தம்மை ஓரளவு மறந்து தமது சீமை மக்களுக்கு இழைக்கும் கொடுமைகளை நிறுத்திக் கொள்வார்கள்

2. MDR 1139 / 1802 p.p. 45-55.