பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

- =மறவா சிமை

கிழமையில் பெரிய மருது சேர்வைக்காரரர் வந்து சந்திப்பாகவும், அதுவரை நெட்டுரில் அவர் தங்கி இருக்குமாறும் கேட்டுக் கொண்டார். அவரது உபயோகத்திற்காக பன்னிரண்டு கலம் அரிசி/ வரத்து வண்டிகளில் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துச் சென்றார்.

சித்திரங்குடி சேர்வைக்காரருக்கு சிவகெங்கைப் பிரதானி பெரிய மருது அனுப்பிய செய்தி மிகுந்த வியப்பை அளித்தது. மூன்று மாதங்களுக்கு முன் முதுகளத்தூர் வட்டார மக்களது கிளர்ச்சியை படுதோல்வி அடையச் செய்து பரங்கிகளுக்கு பக்கபலமாக இருந்த சிவகெங்கைப் பிரதானிகளுக்கு இப்பொழுது திடீரென என்ன ஏற்பட்டது? ஒருவேளை தனது தலைக்கு விலை வைத்துள்ள கும்பெனியாருடன் தம்மைப் பிடித்து ஒப்படைக்கும் சூழ்ச்சியாக இருக்கலாமோ என்று கூட சேர்வைக்காரர் எண்ணினார். சிவகெங்கைப் பிரதானியார், மீனுக்குத் தலையும், பாம்புக்கு வாலுமாக கும்பெனியாரிடமும் நம்மிடம் இரட்டை வேடம் போட்டுக் காண்பிக்கிறாரா.....? வஞ்சகம் சூழ்ச்சி எதுவாக இருந்தால் என்ன?

இத்தகைய சிந்தனையில் ஆறு நாட்கள் ஓடிவிட்டன.

பெரிய மருது சூடியூர் சத்திரத்திற்கு வந்தவுடன் தமது பல்லக்கை நெட்டுருக்கு அனுப்பிச் சித்திரங்குடி சேர்வைக்காரரை அழைத்து வருமாறு செய்தார். இருவரும் நேருக்கு நேர் முதன்முறையாகச் சந்தித்துக் கொண்டனர். அந்தச் சந்திப்பில் இருவரும் பல செய்திகளை - இராமநாதபுரம் சீமை, சிவகெங்கைச் சீமை நிலைமைகளுடன் பக்கத்தில் உள்ள நெல்லை, மதுரை, திண்டுக்கல் சீமை பாளையக்காரர்கள் கும்பெனி நிர்வாகத்திற்கு எதிராகக் குமுறி எழுந்துள்ள குடிகளது நிலைமைகளையும் பரிமாறிக் கொண்டனர். இவைகளுக்கெல்லாம் மேலாக, அடுத்து மறவர் சீமையில் மீண்டும் குடிமக்களைக் கும்பெனியாருக்கு எதிராகத் திரட்ட வேண்டியதன் அவசியத்தையும் பெரிய மருது சேர்வைக்காரர்