பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 மாவீரன் மயிலப்பன்= - - ==

விளக்கியதுடன் கமுதிக்கோட்டை, கீழ்குளம் போரில் உண்மையான நிலையைப் புரிந்து கொள்ளாமல், கலெக்டர் லூவிங்டனது வஞ்சகப் பேச்சை நம்பிப் பரங்கிகளுக்குப் படை உதவி செய்ததற்கான ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

அதுவரை பெரிய மருது சேர்வைக்காரரது பேச்சை மிகவும் அக்கரையுடன் கேட்டு வந்த சித்திரங்குடி சேர்வைக்காரரது உள்ளத்தில் சிவகெங்கைப் பிரதானியது உண்மையான பரங்கி எதிர்ப்பு உணர்வுகளை எளிதாக உணர்ந்தார். நடந்து முடிந்த கோரமான நிகழ்வுகைளக் கெட்ட கனவு போல மறந்து விட்டு தனது இரு பெரும் இலட்சியங்களில் ஒன்றாகிய வெள்ளைப் பரங்கிகளை அழித்து ஒழிப்பதற்குச் சிவகெங்கைப் பிரதானியிடம் நேசக்கரம் நீட்டினார், சித்திரங்குடி சேர்வைக்காரர். மிகுந்த மன நிறைவுடன் பெரிய மருது சேர்வைக்காரர் சிவகெங்கை திரும்பினார்.

அவர் அறிவுறுத்திய பிரகாரம் சிறிது காலம் ஓய்வாக நெட்டுரில் இருப்பதென்று சித்திரங்குடி சேர்வைக்காரர் முடிவு செய்தார். ஆனால், அவரால் அமைதியாக இருக்க முடிந்ததா? இல்லை.... எங்கே அமைதி? சேதுபதி மன்னர் சிறைக் கம்பிகளை உடைத்து வெளியேறும் வரை.... மறவர் சீமை மண்ணில் இருந்து மக்களது எதிரிகளான பரங்கிப் புழுக்களை அள்ளி அப்புறப்படுத்தும் வரை.... அமைதி எங்கே?

சிவகெங்கையில் இருந்து அடிக்கடி ஒலைகள் வந்தன. கட்டபொம்மனது பாஞ்சாலக்குறிச்சி கோட்டை மீது கும்பெனியாரது போர்.

கட்டபொம்மனது கூட்டாளிகளான நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை, கோலார்பட்டி, காடல்குடி, குளத்துார் பாளையக்காரர்களையும் ஒடுக்கத் திட்டம்,

33. Ramnad Collecterate vol. 89 / p 3721.