பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. О

- மறவர் சீமை

தோல்வியுற்ற கட்டபொம்மன்.சிவகெங்கைக் காடுகளில் அபயம் பெற்றது. பின்னர், தவறுதலாக புதுக்கோட்டைத் தொண்டமானது காளாப்பூர் காட்டுப் பகுதிக்குள் சென்றதும், தொண்டைமான் கட்டபொம்மனைப் பிடித்து கும்பெனியாரிடம் ஒப்படைத்தது.

தளபதி பானர்மென் ராணுவ விசாரணை என்ற நாடகம் நடத்தி கட்டபொம்மனைக் கயத்தாறில் தூக்கில் ஏற்றியது.,

கட்டபொம்மனது உறவையும், கிளைகளையும் கீழ்த்தரமான முறையில் நடத்தி அவர்களைக் குற்றவாளிகளைப் போல பாளையங்கோட்டையிலும் பூந்தமல்லியிலும் சிறையில் தள்ளியது.

கட்டபொம்மனது பாஞ்சைப் பாளையத்தைச் சிதைத்து, அழித்ததுடன் அல்லாமல் அவரது கூட்டாளிகளான குளத்தூர், காடல்குடி, நாகலாபுரம், கோல்வார்பட்டி, ஏழாயிரம் பண்ணைப் பாளையங்களையும் பிரித்துப் பரங்கியர்களது கூலிக்காரர்களான மேலமாந்தை, மணியாச்சி, எட்டயபுரம், பாளையக்காரர்களுக்குப் பரிசாக வழங்கியது. கைக்கூலிகளுக்கும், துரோகிகளுக்கும் பரிசுகள் கிடைக்கத்தானே செய்யும்.

கட்டபொம்மனது சகோதரர் ஊமைக்குமாரசாமியையும் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தது.

இவைகளுக்கெல்லாம் மேலாக, மைசூர் தளபதி தூந்தியாவாக் என்ற மாலிக் ஜஹான்ஷா என்ற தேசபக்தர், தென்னகத்து மக்கள் அனைவரையும் திரட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்தற்கெதிராக ஒரே நாளில் அனைத்துப் பகுதியிலும் (01.06.1800ம் தேதியன்று) ஆயுதக் கிளர்ச்சியை நடத்துவதற்காக விரைவு நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பது. இந்தக் கிளர்ச்சிக்கான பொறுப்பை தமிழ்நாட்டில் விருப்பாட்சி பாளையக்காரர் ஏற்றுக் கொண்டிருப்பது,

34.Ramnad Collecterate vol. 98 / 17.10.1799 p.2877-2884. 35. Dr. K. Rajyaiyam - History of Madurai 1972.