பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

மாவீரன் மயிலப்பன் - —

கருமருந்தையும், பத்தாயிரம் துப்பாக்கித் தோட்டாக்களையும் எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக மருது சேர்வைக்காரர்களது மக்கள் சிவத்தத் தம்பியும், உடையணனும் பாஞ்சாலக்குறிச்சியில் தங்கி இருந்தனர். நட்பிற்கு புதிய இலக்கணமாக நாட்டுப்பற்று மிக்க மறவர் சீமை வழங்கிய உதவிகள் முகம் நகமாக இல்லாமல் நகமுகமாக அமைவதுதானே நட்பு என வள்ளுவம் சொல்லுகிறது.

சிவகெங்கைச் சீமையின் இந்த உதவிக்கு நன்றி கூறும் வகையில் பாஞ்சைப் பாளையக்காரர்கள் சிவகெங்கை அணியினருக்கு பட்டாடைகளும், இன்னும் பல அன்பளிப்புகளையும் வழங்கினர். சித்திரங்குடி சேர்வைக்காரருக்குச் சிறப்பாக பொன்னாடையுடன் ஒரு ஜோடி தங்கக் காப்பும், நவகண்டி மாலை, ஒரு குதிரை ஆகியவைகளை அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேலும், இன்னுமொரு இருநூறு வீரர்கள் கொண்ட அணியுடன் இராமநாதபுரம் சீமைக்குள் சென்று மக்கள் கிளர்ச்சியை முடுக்கி விடுமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அதாவது கும்பெனியார் பாஞ்சாலங்குறிச்சி மீது குறிவைத்துள்ளதைத் தடுத்து அவர்களது போர் ஆயத்தங்களைப் பலவகையிலும் சிதறடிக்கும் முயற்சி பாஞ்சாலங்குறிச்சி மீதான அவர்களது தாக்குதலின் உக்கிரத்தை குறைக்கச் செய்வது, வழியில் தரக்குடியில் கம்பளத்தார் அணி சிததிரங்குடி சேர்வைக்காரரது சேவையினைப் பாராட்டி பல அன்பளிப்புகளை அவருக்கு வழங்கியது. அன்று இரவு கழுமுடியில் தங்கிய இந்தக் கிளர்ச்சிக்காரர்கள் கமுதி, அபிராமம் ஆகிய ஊர்களைத் தாக்குவது பற்றித் திட்டமிட்டனர். கிளர்ச்சிக்காரர்களது நடமாட்டம் பற்றி அறிந்த மேல்மாந்தைப் பாளையக்காரர் பயந்து தனது குடும்பத்துடன் சாயல்குடிக்கு ஓடினார். அங்கிருந்த பரங்கியரது சிப்பந்திகளும் இன்னொருபுறம் முதலியார் மடத்திற்கு ஓடினர். அடுத்தநாள் கிளர்ச்சிக்காரர்கள் மேலமாந்தை தானியக் கிடங்குகளைக் கொள்ளையிட்டுக், கும்பெனி மணியக்காரரையும் சம்பிரிதியையும் கைது செய்து காடல்குடிக்கு அனுப்பி வைத்தனர். இந்த இருநூறு பேர்களில் (நூறு பேர் சிவகெங்கைச் சீமையைச் சேர்ந்தவர்கள்). ஐம்பது பேர்