பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன் – 6. 1

மயிலப்பன். தன்மான உணர்வுகளும், தன்னாட்சியின் பெருமையும் ஒன்று சேர்ந்த இளம் சேதுபதி மன்னரையே மிக எளிதாக, ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் ஒரு துப்பாக்கி வெடிகூடச் சுடாமல், மிகுந்த சூழ்ச்சியுடன் கெட்டா பள்ளத்தில் யானையை விழச்செய்து பிடிப்பது போல கைது செய்த கும்பெனியாரது செயலாக்கத்திற்கு இந்த மயிலப்பன் எம்மாத்திரம்? தமக்குத்தாமே ஆறுதல் சொல்லிக்கொண்டார் கலெக்டர்.

ஆயிரம் பேரானாலும், நேருக்கு நேர் போர் புரிந்தால், எதிரியை எளிதாக வென்று விடலாம். வெடி மருந்திற்கு எதிராக வாளும், வேலும் வெற்றிபெற முடியுமா?

ஆனால், மயிலப்பனது உத்திகள் அனைத்தும் மறைவாக இருந்து தாக்குதல், கும்பெனியாரது ஊழியர்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்று அழித்தல், கும்பெனியாரது சொத்துக்களைச் சிறிதும் தயக்கமில்லாமல் தீயிட்டு அழித்தல் இவைகளைத் தடுத்து வெற்றி கொள்ளுதல் எப்படி? இவைகளை நிகழவிடாமல் செய்யும் வழிவகைகள் எவை? இவைதான் கலெக்டரது கற்பனையில் கவர்ந்து நின்றன.

ஆனால், இந்தப் புத்தாண்டு (கி.பி.1801) தொடங்கியதும் கலெக்டரது இந்தச் சிந்தனைகளுக்குப் புதிய பரிணாமமும், கவலைகளும் புதிய வடிவாக எழுந்தன. மயிலப்பனுக்கும், சிவகெங்கைச் சீமை பிரதானிகளுக்கும் நெருக்கமான தொடர்பும் தோழமையும் உள்ளன என்பதைத் தெரிவிக்கும் செய்திகள். அத்துடன் இந்த இருவரது கூட்டுடன் பாஞ்சாலங்கறிச்சிக்கும் தொடர்பு இருப்பது துலக்கமாகத் தெரிந்தன. இதோ அந்தச் செய்திகள்....

“...." எட்டையாபுரம் பாளையத்துக்கு அண்மையில் அமைந்துள்ள காடல்குடி பாளையத்தைச் சேர்ந்த