в 2 மறவர் சீமை
மாவிலோடையில் மயிலப்பன் சேர்வைக்காரரும் அவரது நண்பர் இபுறாகிம் சாகிபும் தங்கியுள்ளனர். நாகலாபுரத்தைக்
- ++
கொள்ளையடிப்பதற்கு...........
“சிவகெங்கையைச் சேர்ந்த அய்யாவுத் தேவன் மற்றும் சேர்வைக்காரர்களும், நாகராஜ் மணியக்காரர், இபுறாகிம் சாகிபும், நூறு வீரர்களும் காடல்குடிக்கு வந்துள்ளனர்”.
“............... கமுதி அமில்தாரது செய்தியின்படி, மயிலப்பன் முன்னுரறு வீரர்களது அணியுடன் அங்கே தங்கியுள்ளார். பீதியடைந்துள்ள பரளாச்சிகுடிகள், பாதுகாப்பிற்காக நீராவி, செவ்வல்காடு நோக்கி தங்களது கால்நடைகளுடன் போய்க்கொண்டு இருக்கின்றனர்.......... ++
“...“ காடல்குடி, பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களது உதவிக்காக மயிலப்பன் சேர்வைக்காரர் அனுப்பப்பட்டு இருக்கிறார். மண்டல மாணிக்கத்தில் சிவகெங்கை சுப்பையர் தங்கி இருக்குமாறும் செய்யப்பட்டுள்ளனர். இவருக்கு உதவியாக ஆறு சேவகர்களும், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளனர். சிவகெங்கைக்கும், பாஞ்சைக்கும் செய்திப் போக்குவரத்தைத் தொடர்வதற்காக மருது சேர்வைக்காரர்கள் ஏற்பாடு இது”.
“................ பாஞ்சாலக்குறிச்சிக்கு சென்றுவந்த காடல்குடி வீரர்கள் குளத்துார் பாதுகாப்பிற்கு அனுப்பப்படுகின்றனர். இவர்களில் ஒரு அணி சாயல்குடிக்கு அனுப்பப்பட உள்ளது. அங்கு புகலிடம் பெற்றுள்ள மேலமாந்தை பாளையக்காரரைப் பிடித்துவர, மேலமாந்தை சேகரம் பட்டறையில் இருந்த நெல் கொள்ளையிடப்பட்டுப் பாஞ்சாலக்குறிச்சிக்கும், காடல்குடிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விட்டன. அங்கிருந்த மேலாளரும், சம்பிரிதியும் தப்பிச் சென்றவர்களைப் பிடித்து வந்துள்ளனர். எல்லாம் மயிலப்பன் சேர்வைக்காரரது நடவடிகக்கைகள்.”