பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- மறவர் சீமை

10. பரங்கியருடன் மோதல்

எத்தனை நாட்களுக்கு இரகசியமாக இந்தச் செய்திகளை இதயத்திற்குள் அமுக்கி வைத்துக் காத்து வருவது, சித்திரங்குடி சேர்வைக்காரர் - அவரது நடவடிக்கைகள் அனைத்திற்கும் பக்கபலமான உதவியும், பாதுகாப்பும் மறைமுகமாக வழங்கிவரும் சிவகெங்கைப் பிரதானிகள் அவர்களை நேரடியாகக் கேட்டு விட்டால் என்ன? கலெக்டர் லூசிங்டன் சிவகெங்கைப் பிரதானிக்கு அவசரக்கடிதம் ஒன்றை தூதுவர் மூலம் அனுப்பி வைத்தார்." இதோ அந்தக் கடிதத்தின் தமிழ் மொழியாக்கம்.

“...................நாள்தோறும் எனக்குக் கிடைத்து வரும் அறிக்கைகள் அனைத்தும், கும்பெனியாருக்கு எதிராகக் கலகக் கொடிபிடித்துள்ள கிளர்ச்சிக்காரர்களுக்கு நீர் ஆதரவு அளித்து வருவதைச் சுட்டிக் காட்டுகின்றன. முதலில், இவைகளை நான் நம்பவில்லை. உமது செல்வாக்கை மக்களது ஆதரவைக் குலைப்பதற்காக, உமது எதிரிகளது ஏற்பாடு என்றுதான் கருதினேன். ஆனால், இப்பொழுது லெப்டினென்ட் மில்லர் மூலம், மயிலப்பன் சிவகெங்கைச் சீமையில் தஞ்சம் பெற்று இருப்பது உறுதியாகி விட்டது. நமது விசுவாசத்தைப் பொய்மைப் படுத்தும் வகையில் பகிரங்கமாக மீறும் இந்தக் குற்றத்தின் கொடுரத்தை

43. Madurai District Records vol 1133/30.03.1801/p.p 200-203.