பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՅՅ மறவர் சீமை

வந்த இந்த குள்ள நரிகளின் சலசலப்பிற்குப் பனங்காட்டு நரிகள் பயப்படப் போவதில்லை. என்றாலும், அவர்களுக்கு மரண அடி கொடுத்து மாய்க்க வேண்டிய முடிவு காலம் நெருங்கி வரும்வரை பொறுமையுடனும், அரசியல் நாகரீகத்துடனும் நடந்து கொள்வது தவிர்க்க முடியாதது அல்லவா?

சிவகெங்கைப் பிரதானி சின்னமருது சேர்வைக்காரர் கலெக்டரது மடலுக்கு இயல்பான முறையில் எழுதும் பதில்போல ஒலை ஒன்றை வரைந்து அனுப்பி வைத்தார். இறுதி நேரம் வரை பரங்கிகள் தம்மைச் சந்தேகம் கொள்ளாதவகையில் நடந்துகொண்டால் அது மறவர் சீமையில் கருக்கொண்டுள்ள பரங்கி எதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்குப் பயனுள்ளதாக அமையும் என்பது சிவகெங்கைப் பிரதானிகளின் சிந்தனையாக இருந்தது. இதோ அவர் கலெக்டர் லூவிங்டனுக்கு அனுப்பி வைத்த ஒலையின் தமிழாக்கம்."

"................. 23.03.1801 தேதியிட்ட கடிதம் கிடைத்தது. அதன் அடக்கத்தைப் புரிந்து கொண்டேன். கடந்த சில காலமாகக் கும்பெனியாருக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, இங்கு அடைக்கலம் அளித்து வருவதாகவும், மீண்டும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ள மயிலப்பனுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், அவனைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் 'எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கும்பெனியாருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்களுக்கு நாங்கள் அடைக்கலம் அளிப்பதா? எங்களது கனவிலும் நினைக்காத ஒன்று. இவ்விதம் நிகழ்ந்து இருந்து, அதற்குரிய குற்றவாளி நாங்களாக இருந்தால், அது எங்களது பொல்லாத காலம் என்பதைத்தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?

மயிலப்பன் எங்களது சீமைக்குள் வந்தால், அவனைப் பிடித்து உடனே தங்களிடம் அனுப்பி விடுவோம்...... மயிலப்பனைப் பிடித்துக்

44. Madurai District Records vol 1133/ dated 30.08.1801/ Page 200-203