உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரன் மயிலப்பன்= =**

கொடுக்குமாறு ஏற்கனவே வரப்பெற்ற கடிதத்தைப் பார்த்து, எங்களது ஆட்களை நாலாபுறமும் அனுப்பி வைத்தோம். ஆனால், எவ்வளவோ தேடிப்பார்த்தும் அவன் அகப்படவில்லை. முன்பு சிங்கன் செட்டியுடன் அவன் சேர்ந்து கிளர்ச்சிகளில் ஈடுபட்ட காட்டுப் பகுதிக்குச் சென்று அவனைப் பிடித்து வருமாறு எங்களது கோட்டைச் சேர்வைக்காரரையும், பாம்பூர் நாயக்கரையும் அனுப்பி வைத்தோம். பயன்இல்லை. மயிலப்பன் ஒரு முரடன். அவனால், எங்களுக்கு என்ன உதவி கிடைக்கும்? பயனற்ற ஒருவனுக்கு ஆதரவு அளித்து கும்பெனியாரது வீணான வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்வதா?

"நாங்கள், சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் விசுவாசத்துடன் நடந்து தங்களது சலுகைகளைப் பெறுவதற்கு இனியும் முயன்று வருவோம். அதனால், எங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கிறது"

"எங்களுக்கு கட்டணுளரில் தாங்கள் கொடுத்துள்ள வாக்குறுதியை நினைவில் இருத்தி வைத்துக் கும்பெனியாருக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்து வருகின்றோம். எங்களைப் பற்றி இத்தகைய புகார்கள் எங்களது எதிரிகளால், எங்களுக்கு எதிராகக் கொண்டு வரப்படுவது எங்களது பொல்லாத காலம்தான் முறையான விசாரணை பாதுகாப்பு வழங்குவீர்கள் என்று நம்புகிறோம்........."

(ஒ-ம்) சிவகெங்கைப் பிரதானி.

சிவகெங்கைச் சேர்வைக்காரரது பதில் கலெக்டருக்குச் சற்று குழப்பத்தைக் கொடுப்பதாக இருந்தது. என்றாலும், தொடர்ந்து கும்பெனி ஒற்றர்கள் திருவாடனை, ஒரியூரில் இருந்தும், சிவகெங்கை பட்டமங்கலத்தில் இருந்தும் கலெக்டருக்கு அனுப்பிய ஓலைகள், சிவகெங்கைப் பிரதானியான மருது சேர்வைக்காரர்கள், பாஞ்சாலக்குறிச்சிக் கோட்டைக்கு ஆயுதங்களையும், மயிலப்பன் பொறுப்பில் அனுப்பி வருவதையும், காளையார்கோவில் காட்டில்